காவல்துறை சித்ரவதையால் தந்தை. மகன் மரணம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸ் (31) அங்குச் செல்பேசி கடை நடத்தி வந்தார். கடந்த 20ந்தேதி முழு முடக்க விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்தது தொடர்பாக காவல்துறையினர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று உள்ளனர்.


காவல் நிலையத்தில் ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டி கேட்ட பென்னிக்ஸ் க்கும் காவல் துறைக்கும் வாக்குவாதம் முற்றவே காவல் துறையினர் பென்னிக் ஸை பிடித்துப் பல மணி நேரம் கட்டி வைத்து அடித்ததாகவும், அவரது ஆசன வாய் உள்ளே லத்தியால் குத்தி காயப்படுத்தியதாகவும் தெரிய வருகின்றது. பின்னர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் இருவரையும் அடைத்தனர்.


சிறையில் பென்னிக்ஸை சந்தித்த அவரது நண்பர்களிடம் காவலர் தாக்கியதில் தனது ஆசன வாயிலிருந்து இரத்தம் வந்து கொண்டே உள்ளது என பென்னிக்ஸ் தெரிவித்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பென்னிக்ஸ் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். அவரது தந்தை ஜெயராஜீம் இன்று காலை மரணமடைந்துள்ளார்.


ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவ|ரும் காவல்துறையின் சித்ரவதையினால் உயிரிழந்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்த சித்ரவதை மரணத்திற்குக் காரணமான சாத்தான்குளம் காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்றும் தொடர்புடைய காவலர்களை உடனடியாக பதவி இடைநீக்கம் செய்ய வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வருபவர்கள் மீது மிக மோசமான சித்ரவதைகளை செய்யும் காவல்துறையினர் போக்கு பெரும் கவலையை அளிக்கின்றது. காவல்துறையினர் அனைவருக்கும் கட்டாய மனித உரிமை கல்வி அளித்து அவர்களை நெறி முறைப்படுத்தும் பணிக்கு முதலமைச்சர் முன்னுரிமை அளிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா