சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பகழனுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல்

சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பகழனுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல் தெரிவித்தார்.


இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பகழன் மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல் செய்தியில் கூறியதாவது : சகோதரர் திரு ஜெ. அன்பகழன் எம்.எல்.ஏ. அவர்களின் புதன்கிழமை மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அவர் பிரதிநிதியாக இருந்த சட்டப்பேரவை தொகுதி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மக்களுக்கு, மிகப்பெரிய இழப்பாகி விட்டது.


கலைஞர் காலத்திலிருந்து இன்றையத் தளபதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காலம் வரையிலும் கழகத்தின் முன்னணிச் செயல் மறவராகப் பணியாற்றியவர். வெட்டிவா என்றால் தம்பி கட்டிவருவான் எனக் கலைஞர் சுட்டியவர்களில் சகோதரர் அன்பகழனும் ஒருவர் என்பதில் எவ்வித ஜயமும் இல்லை அவரின் இழப்பு, தமிழக சட்டப்பேரவைக்கும் மிகப்பெரிய இழப்பாகியிருக்கிறது.


அவரின் மறைவுக்கு துக்கத்துடன் கூடிய இரங்கலைத் தெரிவிப்பதோடு அவரின் மறைவால் வேதனையில் மூழ்கியுள்ள தி.மு.க. தோழர்களுக்கு இவருடைய அன்பார்ந்த குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம்


இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.