மகன் செய்த தில்லாலங்கடி.. தடயங்களை அழித்த காசியின் தந்தை.. அதிரடி கைது..

நாகர்கோவில்: காசி செய்த தில்லாலங்கடி வேலைகள் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று அதற்கான ஆதாரங்களை அவரது தந்தை அழித்து விட்டாராம்..


தடயங்களை அழித்ததாக கூறி, காசியின் தந்தையை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 26 வயசு நாகர்கோவில் காசி என்பவர் பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள் எடுத்து..


லட்சக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார். இதைதவிர, கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ, நிலஆக்கிரமிப்பு இப்படி என 6 கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ளது..


குண்டர் சட்டத்திலும் இவர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளார். காசியின் நண்பர் 19 வயது ஜினோவை ஏற்கனவே போலீசார் கைது செய்த நிலையில், மற்றொர நண்பர் தினேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


தற்போது, காசி மீதான கந்து வட்டி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.


மேலும் பைக்கை அபகரித்தது தொடர்பாக, தனியார் வங்கியில் இருந்தவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்தவர்கள் காசிக்கு உதவி செய்ததாக சொல்கிறார்கள்.அதனால், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.


திடீர் திருப்பம்.. காசி மீது குவிந்த புகார்.. கிடப்பில் போட்ட போலீஸார்.. தோண்டி எடுக்கும் சிபிசிஐடி இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், பணமோசடி செய்த வழக்கில் தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியன் கைதாகி உள்ளார்.


கைது செய்யப்பட்ட தங்க பாண்டியனிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே காசியின் வீட்டில் மெமரிகார்டுகள், செல்போன்கள், லேட்டாப்கள் கைப்பற்றப்பட்டன..


அவைகளை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தும் வந்தனர்.. அப்போதுதான் ஏராளமான ஆதாரங்களை தங்கபாண்டியன் அழித்துள்ளது தெரிய வந்தது.. மேலும் மகனை காப்பாற்றவே இப்படி எல்லாவற்றையும் அழித்து வைத்ததும் தெரியவந்தது..


அதனால் தொடர்ந்து விசாரணையின் பிடியில் உள்ளார் தங்கபாண்டியன்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா