மணல் கொள்ளையை படம் எடுத்த நிருபர் சாதிக்பாட்சா மீது கொடூர தாக்குதல்-பத்திரிகை ஊடக அமைப்புகள் கடும் கண்டனம்இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரியகுளம் கைலாசபட்டி பகுதியில் உள்ள பாப்பியபட்டி கண்மாயில் விவசாயப் பயன்பாட்டிற்கு என்றுஅரசு அனுமதி என்ற பெயரில் மணல் அள்ளி சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் செய்தி சேகரிக்க சென்று புகைப்படம் எடுத்த நிருபர் சாதிக் பாஷா மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதி கும்பலை நாளையதீர்ப்பு இதழ் வண்மையாக கண்டிக்கிறது .


சமூக விரோதி கும்பலால் தாக்கபட்ட சாதிக் பாஷா அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சாதிக் பாஷா வாக்கு மூலம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போய் திரும்பி வரும் போது பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் வந்து என் மீது சரமாரியாக தாக்கினார்கள் குறிப்பாக தாக்கிய நபர்கள் ராஜாவை அடிக்கடி வம்புக்கு இழுக்கிறியா நீ என்ன அவ்வளவு பெரிய ஆழா என்று சொல்லி தாக்கியதாக அவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.


ஆகயினால் காவல் துறை இச்சம்பவத்தின் உண்மை காரணத்தை கண்டறிய திவிர விசாரணை செய்து இந்த கொலை வெறி தாக்குதலில் சம்பந்த பட்ட அனைவரும் மீது எந்த வித பாரம் பட்சம் பாராமல் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாளையதீர்ப்பு இதழ் வலியுறுத்துகிறது .


தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் . படு கொலைகள் . இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக நடை பெற்று வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது . மேலும் பத்திரிக்கையாளுக்கு எந்த வித அச்சம் இல்லாமல் சுதந்திரமாக செய்திகளை சேகரிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .


எனவே : நிருபர் சாதிக் பாஷா மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதி கும்பலை காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்