லடாக் எல்லையில் தமிழக ராணுவ வீரர் பழனி வீர மரணம் : காயல் அப்பாஸ் ஆழ்ந்த இரங்கல் !

இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையில் சீன ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். என்கிற செய்தி வெளியாகி உள்ளன .


அதில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரை சேர்ந்த பழனி என்ற வீரரும் மரணமடைந்துள்ளார். என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது . வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.


மேலும், வீர மரணமடைந்த பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், நம் இந்திய நாட்டிற்க்காக தனது உயிரை தியாகம் செய்து வீர மரண அடைந்த பழனி குடும்பத்திற்கு ரூ 1 கோடி தமிழக அரசு வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .


தகுதியின் அடிப்படையில் பழனியின் குடும்பத்தை சேர்ந்த ஓருவருக்கு அரசு வேலை வழங்க படுவதாகவும். தமிழக அரசின் சார்பில் ராணுவ வீரர் பழனியின் உடலுக்கு ராமநாத புரம் ஆட்சியர் அரசு மரியாதை செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)