புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு குடும்பமே தீக்குளிக்க முயற்சி

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்தை புது குப்பம் கிராமத்தில் வசி வசிப்பவர் அருள். இவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் ஏற்கனவே அவரது சகோதரர்கள் ஐந்து பேர் வீடு கட்டி உள்ளனர். ஆறாவதாக அருள் வீடு கட்டும் வேலையில் ஈடுபட்டு உள்ளார்.


அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள்முருகன் தனது ஆதரவாளர்களுடன் வந்து இடம் தனக்கு சொந்தமானது என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.


போலிப் பத்திரம் மூலம் தங்களது இடங்களை இவர்கள் அபகரிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி அருள் மற்றும் அவரது குடும்பத்தார் காவல் நிலையத்திற்கும் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தில் புகார் செய்தனர்.


ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றனர். ஆனால் இந்த தடையை மீறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அவரது ஆட்களும் தங்களுக்கு இடத்திற்குள் நுழைந்து தகராறில் ஈடுபடுவதாக அருள் குடும்பத்தினர் தெரிவித்து


தங்களுக்கு நீதி வழங்கக்கோரி ஆளுநர் மாளிகை முன்பு தீக்குளிக்கும் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருந்தனர்.