கோவில்பட்டி கிளைச் சிறையில் மேலும் ஒரு விசாரணைக் கைதிக்கு உடல்நலக் குறைவு

கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்த மேலும் ஒரு விசாரணைக் கைதி உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ்(56). இவருடைய மகன் பென்னிக்ஸ்(31). கடந்த 19-ந்தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடை நடத்தியதாக இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த சாத்தான்குளம் போலீசார் கோவில்பட்டி சிறையில் விசாரணை கைதிகளாக அடைத்தனர்.


இதனிடையே சிறையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. விசாரணைக் கைதிகளின் உயிரிழப்பு குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


இந்நிலையில் கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்த மேலும் ஒரு விசாரணைக் கைதி உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைக் கைதியாக இருந்த சாத்தான்குளம் பனை குளத்தைச் சேர்ந்த ராஜா சிங் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


ஏற்கனவே விசாரணைக் கைதிகளாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு கைதி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா