சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியம்

சென்னை விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமான சேவைகள் அதிகபடுத்தப்பட்டுள்ள நிலையில், பயணிகள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியமாக நடந்து கொள்ளும் சூழல் நிலவி வருகிறது.


உள்நாட்டு விமான சேவை தொடங்கிய ஆரம்பத்தில் குறைந்தளவிலான விமானங்களே இயக்கப்பட்ட நிலையில், தற்போது பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் படிப்படியாக விமானங்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது.


பயணிகளுக்கு உடல் வெப்பம் பரிசோதிக்கப்படுவதுடன், ஆரோக்ய சேது செயலி பயன்பாடு உறுதி செய்யப்பட்ட பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.


ஆனால், பயணிகளோ போர்டிங் பாஸ் பெறவும், சந்தேகங்களை கேட்கவும் தனிநபர் இடைவெளியின்றி முண்டியடிக்கின்றனர்.


அதேபோல், இருக்கைகளில் ஒரு இருக்கை விட்டு அமர ஸ்டிகர்கள் ஒட்டப்பட்டிருந்தும் அதனை பொருட்படுத்தாத போக்கு நிலவுகிறது.