என்ன கொடுமை பாருங்க.. மட்டனில் வெடிகுண்டு.. சிதறி வெடித்து வாய் கிழிந்து இறந்த நரி.. திருச்சியில்!.

திருச்சி: மட்டனில் வெடியை மறைத்து வைத்துள்ளனர்.. அந்த மட்டனை பார்த்ததும் நரி ஒன்று ஆசையாக சாப்பிட வந்துள்ளது.. அப்போது வெடி வெடித்து சிதறியதில் நரியின் வாய் கிழிந்து இறந்தேவிட்டது..


இந்த சம்பவம் நம் திருச்சியில்தான் நடந்துள்ளது! திருச்சி மாவட்டம் ஜீயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் வாழை, கரும்பு சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பகுதிகள் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள இடமாகும்.. அதனால் மான், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி, இந்த வயல் பகுதிகளுக்குள் வந்துவிடுகின்றன.


மேலும் விளைபொருட்களை அவை சாப்பிட்டு விடுவதாகவும், பயிர்களை நடமாடியே நாசம் செய்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.. இதற்காக வனத்துறையினருக்கு ஒருசிலர் தொடர்ந்து புகார்களும் அளித்தனர்.


அதனால் வனத்துறையினருடன் போலீசாரும் இணைந்து தீவிரமான கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். நேற்று காலையும் அப்படித்தான் பணியில் இருந்தனர்.. அப்போது ஒரு 12 பேர் கொண்ட ஒரு கும்பல் மீது சந்தேகம் எழுந்தது.. அவர்களிடம் சாக்கு பை-யும் இருந்தது.. அந்த பையை வாங்கி வாங்கி பார்த்தபோது வனத்துறையினர் மிரண்டு விட்டனர்..


வாய் கிழிந்த நிலையில் ஒரு நரி இறந்து கிடந்தது.. வாயெல்லாம் ரத்தம் வழிந்தபடி இருந்தது.. அந்த 12 பேரையும் பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் எல்லாருமே திருவெறும்பூர் அருகேயுள்ள பூலாங்குடி காலனியை சேர்ந்த ராம்ராஜ், சரவணன், ஏசுதாஸ், சரத்குமார், தேவதாஸ், பாண்டியன், விஜயகுமார், சத்தியமூர்த்தி, சரத்குமார், ராஜமாணிக்கம், ராஜூ , பட்டம்பிள்ளை ஆகியோர் என்பது தெரியவந்தது.


வனத்துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்த கும்பலுக்கு வேட்டையாடுவது ஹாபி-யாக இருந்துள்ளது... துப்பாக்கியால் சுடுவது, ஈட்டியால் குத்துவது, வலை விரித்து பிடிப்பது என்பதையும் தாண்டி, அந்த விலங்குகளை வெடி வைத்து பிடிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்திருக்கின்றனர்.. இறைச்சிக்குள் நாட்டு வெடியை மறைத்து வைத்து விடுவார்களாம்..


அந்த இறைச்சியை பார்த்ததும் விலங்குகள் ஓடிவந்து சாப்பிடும்போது, வெடி வெடித்துவிடும். அதில் நிலைதடுமாறி வாய், முகமெல்லாம் வெடித்து சிதறும்போது, அந்த விலங்குகளை எளிதாக பிடித்து கொண்டு வந்துவிடுவார்களாம். வலியால் நிலைகுலைந்து துடிக்கும் அந்த ஜீவனும் வாய் திறக்க வழியில்லாமல் செத்து வந்திருக்கின்றன.


அப்படித்தான் இந்த நரிக்கும் வெடியை வைத்துள்ளனர்.. பசியால் வந்த சரி இந்த இறைச்சியைக் கடித்தபோது, அதிலுள்ள வெடிபொருள் வெடித்து சிதறியதில் நரியின் வாய் கிழிந்து இறந்தேவிட்டது. தேன் எடுக்க இவர்கள் எல்லாரும் காட்டுக்கு வந்தோம், நரிக்காக வரவில்லை என்று இந்த 12 பேரும் சொல்கிறார்களாம். ஆனால் அது சுத்த பொய் என்கிறது போலீஸ் தரப்பு..


தொடர் கிடுக்கிப்பிடி விசாரணையும் நடந்து வருகிறது. இன்னும் யானை இறந்தததையே நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.. பசுவுக்கும் கோதுமை மாவில் இப்படித்தான் வெடியை வைத்தார்கள் பாவிகள்.. இப்போது நம் தமிழகத்திலும் ஜீவராசிக்கு வெடியை வைத்திருப்பது அதிர்ச்சியை தருகிறது!


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
அடி..வாட்டர் பாட்டில் ...முதுகில் குத்து.. டயர் பஞ்சர் : கூட்டத்தில் வைத்து OPS-ஐ தாக்கிய கும்பல்
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
ஆர்டர்லிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
Image