சென்னையில் மேலும் 90 மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா June 13, 2020 • M.Divan Mydeen சென்னையில் இன்று மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 90 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதுபோல சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நாள்தோறும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரர் மற்றும் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனைகளை சேர்ந்த மேலும் 90 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.