சென்னையில் வேகமாக பரவும் கரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிரம்: 4,404 தெருக்கள் வைரஸ் தொற்றால் பாதிப்பு- உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம்

சென்னையில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 4,404 தெருக்களில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும், உயிரிழப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்ச மடைந்துள்ளனர்.


தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதி கரித்து வருகிறது. குறிப்பாக, சென் னையில் கடந்த 6 நாட்களாக தின மும் பாதிப்பு எண்ணிக்கை ஆயி ரத்தை கடந்து வந்து கொண்டிருக் கிறது. சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட் டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.


அதேநேரத்தில் சென்னையில் வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்ட ணத்தையும் தமிழக அரசு நிர்ணயித் துள்ளது.


இவைதவிர நந்தம்பாக்கம் வர்த்தக மையம், தனியார் கல் லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங் களிலும் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா நோயாளிகளுக்கு அலோபதி மருந்துகளுடன், சித்தா மருந்து களான நிலவேம்பு, கபசுரக் குடிநீர் என கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், நோயாளிகள் விரைவாக குண மடைந்து வீடுகளுக்கு செல் கின்றனர்.


சென்னையில் வைரஸ் தொற்று அதிகரித்து வருவது, மக்களி டையே அச்சத்தை ஏற்படுத்தி உள் ளது. டெல்லி மாநாடு, கோயம் பேடு மார்க்கெட் வரிசையில் இன்று வைரஸ் தொற்று மையமாக சென்னை மாறியுள்ளது. ஆரம்பத் தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிக அளவில் வைரஸ் தொற் றால் பாதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது சிறார்கள், இளைஞர் கள், இளம் பெண்கள் உட்பட அனைத்து வயதினரும் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.


உயிரிழப்பு களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தற்போது, 4,404 தெருக்களில் வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளது. நூற்றுக்கணக் கான கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களில் வெளியே செல்ல முடியாமல் சிக்கியுள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சென்னையில் 6 பேரை பரிசோதனை செய்தால் அதில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,562 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகா தாரத் துறை நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 941 ஆண்கள், 621 பெண்கள் என மொத்தம் 1,562 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.


இதில், 1,520 பேர் ஏற்கெனவே தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுடன் தொடர்பில் இருந் தவர்கள். கத்தார், குவைத், மகா ராஷ்டிரா, ஹரியாணா, டெல்லி யில் இருந்து தமிழகம் வந்த 42 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,149 பேருக் கும், செங்கல்பட்டில் 134 பேருக் கும், திருவள்ளூரில் 57 பேருக் கும், வேலூரில் 32 பேருக்கும், விழுப் புரத்தில் 26 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 11,256 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 17,527 பேர் குணமடைந்துள்ளனர்.


நேற்று மட்டும் 528 பேர் குணமடைந்தனர். 17 பேர் உயிரிழப்பு மேலும், நேற்று ஒரேநாளில் அரசு மருத்துவமனைகளில் 22 வயது இளைஞர் உட்பட 14 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்தனர். இதில், 14 பேர் சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தனர். 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமே காரண மாக உள்ளது. இதையடுத்து, தமி ழகத்தில் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது.


சென்னையில் மட்டும் 224 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 23,298 பேரும், செங்கல்பட்டில் 1,988 பேரும், திருவள்ளூரில் 1,386 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய கரோனா வைரஸ் தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் பரவியது வீரியம் குறைந்த கரோனா வைரஸ். தற்போது பரவி வரும் கரோனா வைரஸ் வீரியம் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் மகாராஷ்டிராவில் பரவி வந்தது. அங்கு உயிரிழப்பு அதிகரிக்க இந்த வைரஸே முக்கிய காரணம். மகாராஷ்டிராவில் இருந்து ஏராளமானோர் தமிழகத்துக்கு வருகின்றனர்.


அவர்கள் மூலம் தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவி இருக்க வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் முழு ஊரடங்கு அமல்? சென்னையில் கரோனா வைரஸ் பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தமுள்ள 15 மண்டலங்களில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில்தான் கரோனா வைரஸ் தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அதனால், பாதிப்பு அதிகமுள்ள மண்டலங்களை மட்டும் தனிமைப்படுத்தலாமா அல்லது சென்னை முழுவதையும் தனிமைப்படுத்தி முழு ஊரடங்கை அமல்படுத்தி வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாமா என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.