பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த 3 காதல் ஜோடிகள்!

ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலையத்தில் மூன்று காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள வெள்ளி திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்.இவர் அதே பகுதியை சேர்ந்த தாரணி என்ற பெண்ணை கடந்த 2வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.


இரு வீட்டாரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் இருவரும் சித்தார் அருகில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்புகோரி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.


இதே போன்று குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மதன்ராஜ் பூனாட்சி பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்து வந்துள்ளார்.பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் மாவட்டத்தில் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.


இதை தொடர்ந்து பவானி நகர பகுதியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி என்பவர் திருச்செங்கோட்டை சேர்ந்த சுஜா என்ற பெண்ணை இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததால் திருமணத்திற்கு சம்மதிக்க இரு வீட்டார் பெற்றோர்கள் தெரிவிக்கததால் கோவில் திருமணம் செய்து கொண்டு உயிருக்கு பாதுகாப்பு கேட்டு பவானி மகளிர் காவல் நிலையத்தில் வந்தனர்.


இதையடுத்து மூன்று பேரின் வீட்டாரை மகளிர் போலீசார் வரவழைத்து சமரசம் நடத்தினர்.இருப்பினும் மணமகள் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மணமகன் வீட்டாருடன் போலீசார் காதல் தம்பதிகளை அனுப்பி வைத்தனர்.


சுப முகூர்த்தம் தினமான இன்று ஒரே நாளில் காதல் திருமணம் செய்து கொண்ட மூன்று ஜோடிகள் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.