புதுச்சேரி கல்வி அமைச்சரிடம் ரூ. 3 கோடி சுருட்டிய கில்லாடி டி.எஸ்.பி..! கணக்கில் வராதப்பணமா...

மூன்று கோடி ரூபாயை சாமர்த்தியமாக அபேஸ் செய்த தமிழக போலீஸ் டி.எஸ்.பி ஒருவரின், வீடு புகுந்து மிரட்டியதாக புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


என்.ஆர் .காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் காலாப்பட்டு கல்யாணசுந்தரம்..! இவருக்கும் , இவரது உறவினரும், மயிலம் காவலர் பயிற்சி பள்ளி டி.எஸ்.பியுமான கண்ணபிரான் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது.


இந்த நிலையில் டி.எஸ்.பி கண்ணபிரான் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் காவல் நிலையத்தில் கல்யாண சுந்தரம் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து எதற்காக டி.எஸ்,பிக்கும் தனக்கும் தகராறு ஏற்பட்டது என்ற ரகசியத்தை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரம்.


தற்போது ரியல் எஸ்டேட் தொழிலில் தற்போது ஈடுபட்டு வரும் கல்யாண சுந்தரம். காரைக்காலில் 100 ஏக்கரில் நிலம் வாங்குவதற்கு திட்டமிட்டு அதற்காக மூன்று கோடி ரூபாயை சென்னையில் உள்ள ஒரு பைனான்சியரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்