எதிர்ப்பார்க்கவில்லை.. 2.3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. இத்தாலியை முந்திய இந்தியா.. 6வது இடம்!

டெல்லி: இந்தியாவில் மொத்த கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை 236184 ஆகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இத்தாலியை இந்தியா முந்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி இறுதியில் இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியது.


அதன்பின் மிக மெதுவாக கொரோனா கேஸ்கள் உயர தொடங்கியது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்தியாவில் நான்கு முறை லாக்டவுன் கொண்டு வரப்பட்டது. Coronavirus: Total cases in India reaches 236184 , the country reaches 6th place அதேபோல் தற்போது கட்டுப்பாட்டு பகுதியில் மட்டும் ஐந்தாவது லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் இந்தியாவில் மொத்த கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை 236184 ஆகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இத்தாலியை இந்தியா முந்தியுள்ளது. இந்தியாவில் உலக அளவில் கொரோனா பாதிப்பில் 6வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவிற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா,பிரேசில், ஸ்பெயின், யுகே ஆகிய நாடுகள் உள்ளது.


இந்தியாவில் கொரோனா காரணமாக 6649 பேர் பலியாகி உள்ளனர். 116290 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். 113233 பேர் குணமடைந்து உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிராதான் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 80299 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 2849 பேர் அங்கு பலியாகி உள்ளனர்.


அடுத்தடுத்தாக தமிழ்நாட்டில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் 20694 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 235 பேர் அங்கு பலியாகி உள்ளனர். டெல்லியில் 26334 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 708 பேர் அங்கு பலியாகி உள்ளனர். கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்...


சென்னைக்கு மட்டும் 5 அமைச்சர்களை களமிறக்கிய அரசு குஜராத்தில் 19119 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 1190 பேர் அங்கு பலியாகி உள்ளனர். ராஜஸ்தானில் 10084 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 218 பேர் அங்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts
கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை!
Image
அரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்
Image
பாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..!!
Image
முகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்!!!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image