சென்னையை தொற்று நரகமாக்கிய கிருமி!! : 15 மண்டலங்களிலும் கொரோனாவின் அட்டகாசம் உச்சம்!!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,216 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 15ம் தேதி நிலவரப்படி, சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டது.


சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 16,671 பேர் குணமடைந்துள்ள நிலையில் 347 பேர் உயிரிழந்துள்ளனர்.


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 59.96% பேர் ஆண்கள், 40.03% பெண்கள் ஆவர். 0.01% திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஜூன் 15ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.


ராயபுரம் – 5,216


கோடம்பாக்கம் – 3,409


திரு.வி.க நகரில் – 2,922


அண்ணா நகர் – 3,150


தேனாம்பேட்டை – 3,844


தண்டையார் பேட்டை – 4,082


வளசரவாக்கம் – 1,395,


அடையாறு – 1,809,


திருவொற்றியூர் – 1,171,


மாதவரம் – 854


பெருங்குடி – 594,


சோளிங்கநல்லூர் – 586,


ஆலந்தூர் – 624,


அம்பத்தூர் – 1,105,


மணலி – 448 பேர்,


மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 687 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி அதிரடி உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image