கொரோனாவால் ஒரே நாளில் 13 பேர் மரணம்.. எல்லாமே சென்னையில் தான்.. உயிரிழப்பின் பகீர் பின்னணி.சென்னை: சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த 13 பேரில் 12 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் சென்னைக்கு அருகே செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் 13 பேர் உயிரிழந்ததாக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. இந்த 197ல் 141 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். 25 பேர் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். தமிழக கொரோனா மரணம் தமிழகத்தின் பிற பகுதியில் மொத்தம் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.


எல்லா ஊர்களிலும் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 197 பேரில் பெரும்பாலனோர் 40 வயதை கடந்தவர்கள் ஆவர். குறிப்பாக உயிரிழந்தவர்களில் பலர் 50 முதல் 60 வயதை கடந்தவர்கள் ஆவர்.


அவர்களில் பலருக்கு உடலில் ஏற்கனவே பல்வேறு நோய் தொற்று இருந்துள்ளது. இத்துடன் கொரோனாவும் வந்ததால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 12 பேர் பலி நேற்றை புள்ளி விவர அறிக்கையில் 13 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறையின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த 13 பேரில் 12 பேர் சென்னைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். செங்கல்பட்டில் ஒருவரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த 13 பேரும் 50 வயதை கடந்தவர்கள் ஆவர். 13ல் 9 பேர் 60 வயதை கடந்தவர்கள் என்றும், 8 பேர் 70 வயதை கடந்தவர்கள் என்றும் அரசின் சுகாதாரத்துறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெண்கள் உயிரிழப்பு தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 184 பேர் கொரோனாவால் உயிரிழந்திருந்த நிலையில், 185வது நபராக 50வயது பெண் சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவனையில் 28ம் தேதி மூச்சுத்திணறால் உயிரிழந்தார். 186ஆவது நபராக 55 வயது பெண் சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 29ம் தேதி காலை 10 மணிக்கு மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.


சுவாச பிரச்சனை கொரோனாவுக்கு 187வது நபராக 73வயது ஆண் சென்னையில் கடந்த ஜூன் 1ம் தேதி காலை 8.40 மணிக்கு உயிரிழந்தார். குறைந்த ரத்த அழுத்தத்தால் உறுப்புகள் செயல் இழந்து உயிரிழந்ததாக (septic shock) கூறப்பட்டுள்ளது 188ஆவது நபராக 78வயது ஆண் சென்னையில் 30ம் தேதி மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.


189வது நபராக 56வயது பெண் . குறைந்த ரத்த அழுத்ததத்தால் உறுப்புகள் செயல் இழந்து 31ம் தேதி சென்னை தனியார் மருத்துவமைனையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 190ஆவது நபராக 78வயது ஆண் சென்னையில் தனியார் மருத்துவமனையில் ஜூன் 1ம் தேதி உயிரிழந்தார்.


இவரது இறப்புக்கு கொரோனாவுடன் மாரடைப்பு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு அதிகரிப்பு 191வது நபராக 56வயது பெண் சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் ஜூன் 1ஆம் தேதி உயிரிழந்தார். 192வது நபராக 73வயது ஆண் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவனையில் ஜூன் 1ம் தேதி இறந்தார். 19ஆவது நபராக 74வயது ஆண் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 30ம் தேதி உயிரிழந்தார்.


194வது நபராக 70வயது ஆண், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஜூன் 1ம் தேதி உயிரிழந்தார். 195வது நபராக 62வயது ஆண் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஜூன் 1ம் தேதி இறந்தார். 196வது நபராக 70வயது ஆண் கடந்த சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஜூன் 2ம் தேதி உயிரிழந்தார்.


197 ஆவது நபராக செங்கல்பட்டில் 72வயது ஆண் கடந்த ஜூன் 1ம்தேதி இறந்தார். உயிரிழந்த பலருக்கு சர்க்கரை வியாதி ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தது. மூச்சுதிணறல், மாரடைப்பு , உறுப்பு செயல் இழப்பு போன்றைவை மரணத்திற்கு காரணமாக இருந்தது. உயிரிழந்த 13 பேரில் 3 பேர் பெண்கள்,. 10 பேர் ஆண்கள் ஆவர். 3 பெண்களும் 50 முதல் 60வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.