இந்துவின் சடலத்தை சுமந்து சென்ற முஸ்லிம்கள்.. இந்து மதப்படி இறுதி சடங்கும் செய்த நெகிழ்ச்சி.. சபாஷ்.

மும்பை: மகாராஷ்ட்ராவில் மாரடைப்பினால் மரணமடைந்த முதியவருக்கு முஸ்லிம்கள் இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளனர். 4-வது லாக்டவுன் போடப்பட்டுள்ளது.. பல தளர்வுகளும் அமலில் உள்ளது.. எனினும் ஏராளமானோரால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலைமை உள்ளது.. தினம் தினம் இவர்கள் அவஸ்தைக்கு உள்ளாகி வருகின்றனர்.


இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. அகோலா மாவட்டத்தில் ஒரு வயதான தம்பதி வசித்து வந்துள்ளனர்.. இவர்களுடைய மகன் நாக்பூரில் வேலை பார்த்து வருகிறார். வயதான பெண்ணுக்கு கொரோனா சமீபத்தில் வயதான அந்த பெண்மணிக்கு கொரோனாவைரஸ் இருப்பது தெரியவரவும், அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்..


அங்கு தீவிரமான சிகிச்சையும் நடந்து வருகிறது. இந்த சமயத்தில், முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். அதனால் தந்தையின் மரணம் தொடர்பாக நாக்பூரில் இருக்கும் மகனுக்கு தகவல் சொல்லப்பட்டது.. ஆனால் அவரோ நேரில் வர முடியாது என்று சொல்லிவிட்டார்..


மேலும் பெற்ற தந்தையின் சடலத்தை வாங்கவும் விருப்பம் காட்டவில்லை. பெரிய மனது படைத்த முஸ்லீம்கள் இதனை அறிந்த அகோலா குச்சி மேமன் ஜமா அத் முஸ்லிம் அமைப்பினர், தாங்களே அந்த பெரியவருக்கு இறுதி சடங்கு செய்துவிடலாம் என முடிவெடுத்தனர். இறந்த முதியவர் இந்து என்பதால், அவரது முறைப்படியே இறுதி சடங்கையும் செய்து அகோலாவில் உடல் தகனமும் செய்யப்பட்டது.


இது குறித்து அந்த ஜமா அத் தலைவர் ஜாவேத் ஜகேரியா சொல்லும்போது, "ஊரடங்கு காலத்தில் பலரும் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடல்களை பெற மறுப்பு தெரிவித்து விடுகிறார்கள். நாங்கள் செய்கிறோம் அதனால்தான் அவர்களின் சடலங்களை பெற்று இறுதி சடங்குகளை செய்கிறோம்..


அவர்களின் குடும்ப முறைப்படி, தகனம் அல்லது புதைத்துவிடுகின்றோம்... இந்த லாக்டவுன் சமயத்தில் மட்டும் இதுவரை 21 நபர்களுக்கு சொந்த செலவில் இறுதி சடங்குகள் செய்துள்ளோம்.. இதில் 5 பேர் இந்துக்கள் ஆவர் என்று அவர் தெரிவித்தார். மனிதாபிமானம் பெற்ற தந்தை இறந்தும்கூட அவரது மரணத்துக்கும் வராமல், உடலையும் பெறாமல் மறுப்பு செய்த நிலையில், இறுதி சடங்கையும் இந்துமுறைப்படி முஸ்லிம்கள் செய்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.


இந்த மனிதாபிமான செயல் அனைவரும் நெகிழ்ச்சியடையவும் வைத்துள்ளது. இந்த கொரோனா தாக்கம் வந்தபிறகுதான் பலரது சுயரூபங்கள் வெளியே வருகின்றன.. ஏராளமானோரின் மனித நல்லியல்புகளும், மிருக குணங்களும் இந்த சமயத்தில் வெளிப்பட்டும் வருகின்றன.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image