எந்தெந்த ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கும்...

ஜூன் 1 முதல் நாடு முழுவதும் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில், அதற்காக இன்று முதல் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட உள்ளன.


பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்வுளுடன் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரயில்கள், பேருந்துகள், விமானச் சேவைகளுக்கு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஜூன் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் 200 ரயில்கள் இயக்கப்படவுள்ளன.


அதற்கு ஆன்லைனில் மட்டும் டிக்கெட் முன் பதிவு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் ரயில் நிலையங்களில் இருக்கும் முன்பதிவு மையங்களிலும், டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


அதன்படி, இன்று காலை 8 மணி முதல் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட உள்ளன.


தெற்கு ரயில்வே மண்டலத்தில், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய முன்பதிவு மையங்கள் மட்டும் குறைந்தபட்சம் 2 கவுண்டர்கள் கொண்டு செயல்படும்.


இந்த மையங்களில் முன்புபதிவு மட்டுமே செய்யமுடியும். மறுஅறிவிப்பு வரும் வரை ரத்துசெய்யப்பட்ட ரயில்களுக்கான பணத்தை தற்சமயம் திரும்பப்பெற இயலாது. முன்பதிவு செய்ய கவுண்டர்களுக்கு வருபவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக விலகலை கட்டாயம் பின்பற்றவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.