மதுரை போலீஸ் கமிஷனருக்கு அதிர்ச்சி கொடுத்த இவர் பெயரிலேயே போலி முகநூல் கணக்கு..

இணையதளத்தில் நடைபெறும் குற்றங்களையும் மோசடிப் பேர்வழிகளையும் கண்டுபிடிப்பதில் திறமையானவர் மதுரை மாநகர காவல்துறை ஆணையரும் கூடுதல் காவல்துறை தலைவருமான டேவிட்சன். இவர் பெயரிலேயே போலி முகநூல் கணக்கு தொடங்கி கருத்துகளைப் பதிவிட்டுவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   


பொது நிகழ்சிகளில், அதிலும் கல்வி சார்ந்த நிகழ்சிகளில் கலந்து கொண்டால்கூட சுருக்கமாகப் பேசிவிட்டு செல்லும் இயல்புடைய மாநகர ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், முகநூலில் எப்போதாவது கருத்துகளைப் பதிவார். அதிலும் பொதுமக்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கருத்துகளை மட்டுமே பதிவுசெய்வார்.


இந்த நிலையில், அவருடைய பெயரில் இன்னொரு முகநூல் கணக்கில் தினந்தோறும் பல்வேறு கருத்துகள் பதியப்பட்டன. இதனைப் பலர் பாராட்டியும், பதில் கருத்துகளைப் பதிவிட்டும்வந்தனர். இந்தத் தகவல் ஆணையர் டேவிட்சன் கவனத்துக்குப் போனதும் அதிர்ந்துபோனார்.


உடனே, தன்னுடைய உண்மையான முகநூல் பக்கத்தில், `முகநூல் நண்பர்கள் கவனத்திற்கு.... உங்கள் புரொஃபைலில் இருக்கும் போட்டோவை களவாடி உங்கள் பெயர்களில் போலியான முகநூல் கணக்கைத் தொடங்கி, ஏற்கனவே உங்கள் நட்பு வட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்புகிறார்கள் சில விஷமிகள். அதைப்பார்த்து உங்கள் நண்பர்கள் கன்ஃபார்ம் கொடுத்து விடுகிறார்கள். அதைத் தொடர்ந்து, உங்கள் பெயரில் தவறான கருத்துகளைப் பதிவேற்றுவார்கள் அல்லது ஏமாற்றுவார்கள்.


எனவே கவனமாக இருங்கள். என் பெயரில் புதிதாக ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தால் அதை யாரும் ஏற்க வேண்டாம்' என்று தெரிவித்துள்ளார்.


இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ''சம்பந்தப்பட்ட நபர் யார் என்பதை தற்போது சைபர் க்ரைம் பிரிவு விசாரித்துவருகிறது. அமெரிக்காவிலிருந்து கமிஷனர் பெயரில் போலி முகநூல் கணக்கு ஆரம்பித்திருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது'' என்கின்றனர்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image