சகோதரருக்கு லோகேசனை அனுப்பிவிட்டு, கடலில் குதித்த சென்னை பயிற்சி மருத்துவர்!

நேற்று மாலை 7 மணி அளவில் அடையாளம் தெரியாத ஒரு நபரின் உடல் சென்னை மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் எதிரே கரை ஒதுங்கியது.


வழக்கு பதிவு செய்த மெரினா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில் இறந்தவர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மல்லிகா அர்ஜூன் (35) என்பதும் அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் என்பதும் தெரியவந்தது.


இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் இவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் இவர் கடந்த சில தினங்களாக மனம் உடைந்து காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.


இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் தனது விலை உயர்ந்த காரில் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து கலங்கரை விளக்கம் அருகே காரை நிறுத்திவிட்டு இவர் கடலுக்குள் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இறப்பதற்கு முன் மெரினாவில் காரை நிறுத்திவிட்டு தனது சகோதரருக்கு வாட்ஸ்அப்பில் கார் லொகேஷனை அனுப்பிவிட்டு எனது இந்த முடிவுக்கு யாரும் காரணமல்ல. அப்பா அம்மாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும் என மெசேஜ் செய்துள்ளார் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.


உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் மருத்துவரின் குடும்பத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image