போலி இ-பாஸ் தயாரித்து அதன் மூலம் ஆட்களை அழைத்து வரும் புரோக்கர்களால் -அச்சத்தில் தென்மாவட்டங்கள்!

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றினால், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு திரும்பத் துடிக்கிறார்கள். சென்னையைவிட்டு வெளியேறத் தொடங்கியவர்கள் கிடைத்த வாகனங்களில், தங்கள் ஊர் திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள்.


அப்படி ஊர் திரும்புவதற்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்காக மாவட்டக் கலெக்டர் தருகிற இ-பாûஸப் போன்று போலி இ-பாஸ் தயாரித்து அதன் மூலம் ஆட்களை அழைத்து வரும் புரோக்கர்களால் பெரிய லெவலில் கட்டணக் கொள்ளையும் அடிக்கப்படுகிறது.              


சம்பவம்- 1தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி நகர் பக்கம் வந்த ஒரு சொகுசு வேனை மடக்கியிருக்கிறார் அந்த டிவி ஷனின் டி.எஸ்.பி.சக்திவேல். 17 நபர்கள் உள்ளே இருக்க, டிரைவரிடம் விசாரித்த போது, சென்னையைச் சேர்ந்த தென்மாவட்டத்தினர் துக்க சம்பவ வீட்டிற்குச் செல்வ தாகவும், அதற்கான இ-பாûஸயும் காட்டியிருக்கிறார் டிரைவர். பாûஸ ddஆராய்ந்த டி.எஸ்.பி. அதில் நடப்பு தேதி யை தவிர்த்து அதன் பிறகான தேதியைக் குறிப்பிட்டி ருந்ததால், சந்தேகப்பட்டவர் உரிய முறையில் டிரைவரை விசாரித்திரிக்கிறார்.


சென்னை கொரோனா பீதியில் வெளியேறிய இவர்கள் தென்காசி, நெல்லை, நாகர் கோவில் செல்பவர்கள். அப்படிப்பட்ட 22 பேரை இந்தப் போலி இ-பாஸ் மூலமாக நபர் ஒருவருக்கு ஏழாயிரம் ரூபாய் கட்டணத்தில் தான் அழைத்து வந்ததாகச் சொன்னவர், வழியில் சிலரை இறக்கிவிட்டு, பின் இங்கே வரும்போது மாட்டிக்கொண்டதைத் தெரிவித்திருக்கிறார்.


போலி இ-பாஸ் தயாரித்த சென்னை டிரைவர்களான நீதிபதி மற்றும் வினோத் இருவரையும் கைது செய்த டி.எஸ்.பி சொகுசு வேனை பறிமுதல் செய்திருக்கிறார். டிரைவர்கள் உட்பட 19 பேரையும் அப்படியே நகரின் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்துத் தனிமைப்படுத்தியிருக்கிறார். ரத்த சோதனையும் நடந்திருக்கிறது.          


 சம்பவம் -2நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூர் ஜாபர் சாதிக், கடந்த மே 2ஆம் தேதியன்று சென்னையிலிருந்து 5 பேரை தனது சொகுசு காரில் வீரவநல்லூர் அழைத்து வந்திருக்கிறார். தகவல் உளவுப் பிரிவின் மூலம் காவல் நிலையம் போக, அவரது டிராவல்ஸ் கம்பெனிக்கு வந்த இன்ஸ்பெக்டர் சாம்சன், எஸ்.ஐ.கார்த்திகேயனும் அந்தக் காரைச் சோதனையிட்ட போது ஒட்டப்பட்ட இ-பாûஸ சரிபார்த்திருக்கிறார்கள். உரிய டிபார்ட்மென்ட் வரை விசாரித்ததில் அந்த இ-பாஸ் போலியானது எனத் தெரியவர, பின்னர் விசாரணையைக் கடுமையாக்கி இருக்கிறார்கள்.


சென்னையிலிருந்து 5 பேரையும் நபர் ஒன்றுக்கு ஆறாயிரம் ரூபாய் கட்டணத்தில் அழைத்துக் கொண்டு வந்தது தெரியவர, சொகுசு காரைப் பறிமுதல் செய்தவர்கள் அதன் டிரைவர்களான பூமிநாதன், ரகுமான் இரண்டு பேரையும் ரிமாண்ட் செய்திருக்கிறார்கள். இந்தப் போலி இ-பாûஸத் தயாரித்த டிராவல்ஸ் அதிபர் ஜாபர் சாதிக்கும், அவரது சகோதரியும் தலைமறைவாகியிருக்கிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்ட எல்லை பார்த்திபனூர் சோதனைச் சாவடியில் பணியிலிருந்த தாசில்தார் செந்தில்வேல் முருகன், டவேரா பச 65 ஆஇ 1353, இன்னோவா பச 67 க 9799 இரண்டு கார்களையும் மறித்துச் சோதனை யிட்டிருக்கிறார். சென்னையிலிருந்து முறையான இ-பாஸில் வந்ததாகத் தெரிவித்த அவர்கள், கார்களில் ஒட்டப்பட்ட இ-பாûஸக் காட்டியிருக்கிறார்கள்.


சோதனையிட்ட தாசில்தார் அந்த இரண்டு வாகனங்களிலும் ஒட்டப்பட்ட இ-பாஸ் ஒரே எண்ணில் இருந்ததால், அது போலியானது என தெரியவர ஐந்தாயிரம் ரேட் அடிப்படையில் அவர்களைச் சென்னையிலிருந்து அழைத்து வந்தது விசாரனையில் வெளிப்பட்டிருக்கிறது. வாகனங்கள் உட்பட அவர்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.


இது போன்று கூட்டம் கூட்டமாகச் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குத் திரும்புபவர்களால் பாதுகாப்பாக இருக்கிற தென்மாவட்ட மக்களிடம், அச்சம் பரவியிருக்கிறது. இப்படித் தெரியாமல் எத்தனை பேர் உள்ளே வந்திருக்கிறர்களோ. அவர்களால் இனிவரும் நாட்களில் தொற்றுப் பரவல் வெளிப்படலாம். நாம் இதுவரை 40 நாட்களுக்கும் மேலாக முடங்கிக்கிடந் தது வீணாகிவிடுமோ என்ற பீதியிலும் பதை பதைப்பிலும் இருக்கிறார்கள்.


இதையறிந்ததென்மண்டல கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும் அடிஷனல் செகரட்டரியுமான கருணா கரன், தென்மாவட்டத்தின் அனைத்து எல்லைப் பகுதியையும் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவர் வாகனங்களின் சோதனையைக் கடுமையாக்கியவர் குறுக்கு வழிகளை யும் அடைத்திருக்கிறார்.


நெல்லை மாநகர எல்லைகளில் காண்காணிப்பு கோபுரங்களை அமைத்த துணைக் கமிசனரான சரவ ணன், கிராமங்களின் வழியாக வாக னங்கள் வந்துவிடக் கூடாது என்பதற் காக எல்லைப்புற கிராமங்களை உஷார் படுத்தியவர், புதிய நபர்கள் கிராமங் களின் வழியாக வரும் போது மடக்கித் தகவல் தர, கிராமக் கண்காணிப்பு கமிட்டியையும் அமைத்திருக்கிறார்.


’’தென்மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனாத் தடுப்புகள் வீணாகிவிடக் கூடாது. அது போன்று எந்த வாகனங்கள் வந்தாலும் அந்தந்த மாவட்ட எல்லைகளில் அவர்களுக்கு சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாஸிட்டிவ் என்றால் வார்டு சிகிச்சைக்கும், நெகட்டிவ் என்றால் 15 நாட்கள் அந்தப் பகுதியிலேயே தனிமைப்படுத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது’’ என்கிறார் தென் மண்டல சிறப்பு அதிகாரியான கருணாகரன்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image