இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை... நாளை முதல் தளர்வுகள் அமலில்..!

ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளுப்பட்டுள்ள நிலையில் மெல்ல மெல்ல சென்னையில் மீண்டும் இயல்பு நிலை திரும்புகிறது.


கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டதால்  கடந்த 45 நாட்களுக்கும் மேலாக சென்னையில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது இந்த நிலையில். கடந்த வாரம் ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அறிவித்திருந்தது.


குறிப்பாக தனிக்கடைகள் இயங்க அனுமதித்திருந்தது. இருப்பினும் கூட மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த நிலையில் நாளை முதல் தேநீர் கடைகள் இயங்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.


சலூன் கடைகள் பியூட்டி பார்லர்கள் , காம்ப்ளக்ஸ் கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் தவிர்த்து பெரும்பாலான கடைகளை திறப்பதற்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு தளர்வு அளித்துள்ளது.


இதன் காரணமாக நாளை முதல் சென்னையில் பெரும்பாலான கடைகள் தனியார் நிறுவனங்கள் செயல்பட உள்ளன.


இதனை அடுத்து தற்போது கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வெறிச்சோடி காணப்பட்டது சாலைகள் கடைத்தெருக்கள், உள்ளிட்டவை தற்போது மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இது நாளை மேலும் அதிகரிக்கும் எனவும் சென்னை மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image