சொந்த ஊர் செல்ல அனுமதி; கட்டுப்பாட்டு அறை திறப்பு...

சென்னை: சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோருக்கு, அனுமதி சீட்டு வழங்குவதற்காக, மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில், இதுவரை திருமணம், இறப்பு, அவசர மருத்துவ உதவி போன்ற, மூன்று காரணங்களுக்காக மட்டும், வெளியூர் செல்ல விரும்புவோர், tnepass.tnega.org என்ற, இணையதளத்தில் விண்ணப்பித்து, அனுமதி சீட்டு பெற்று வந்தனர்.


தற்போது, அதே இணையதளத்தில், இம்மூன்று காரணங்களை தவிர்த்து, மற்றவர்களும் வெளியூர் செல்ல விரும்பினால் விண்ணப்பித்து, அனுமதி சீட்டு பெறலாம் என, அரசு அறிவித்துள்ளது.


ஆனால், அனுமதி சீட்டு இல்லாமல், யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல, அனுமதி சீட்டு பெற்றாலும், அவர்கள் செல்லும் இடத்தில் தனிமைப் படுத்தப்படுவர்.


அனுமதி சீட்டு வழங்குவதற்காக, தமிழ்நாடு மின்னாளுமை முகமை சார்பில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை பணிக்கு, ஊரக வளர்ச்சித் துறை சிறப்பு செயலர், பிங்கி ஜோவல்; அரசு கேபிள், 'டிவி' கார்ப்பரேஷன் பொது மேலாளர், ஆனந்தகுமார்; 'பைபர் நெட்' கார்ப்பரேஷன் பொது மேலாளர், சாந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்