கரோனா பாதிக்காத பகுதிகளில் தடுப்புகளை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி மனு! – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

கரோனா பாதித்த பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றக் கோரிய மனுவுக்கு மே 14-ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் பல்வேறு இடங்களில்,  கரோனா பாதித்த வீடுகளையும்  அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காவல்துறை தடுப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் வசிக்கும் பகுதிகளிலும், தேவையில்லாத பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றக் கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


அந்த மனுவில், தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல்  அவதிப்படுகின்றனர்.  பல பகுதிகளில் தெருக்களிலிருந்து வெளியே செல்ல முடியாத அளவிற்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  


ஒரு சில இடங்களில் கரோனா தொடர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் தடுப்புகளை அகற்றாமல் காவல்துறை தொடர்ந்து வைத்துள்ளது.   இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால்,   தேவையில்லாத சட்டவிரோதமான தடுப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.


இந்த வழக்கு  நீதிபதிகளின் வினித் கோத்தாரி , நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா  அடங்கிய அமர்வு முன்பு வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணைக்கு வந்தது .


அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர்,  கரோனா பாதித்த பகுதிகளுக்கு மட்டுமே தடுப்பு ஏற்படுத்தி உள்ளதாகக் கூறி அதற்கான பட்டியலை தாக்கல் செய்தார்.  


வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த ஒரு தடையும் இருக்கக்கூடாது.  அதே வேளையில்,  சட்டவிரோதமாக வெளியே சுற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 


பின்னர், மனுவுக்கு மே 14-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு  விசாரணையை 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Popular posts
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image