ஷாக்.. ஊருக்கு அனுப்புங்க ஆவேசத்தில் வட மாநிலத்தவர்.. போலீஸ் மீதும் தாக்குதல்.. கொரோனா பேராபத்து.

எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கு வட மாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்து வருகின்றனர்... இது அவர்களின் நியாயமான கோரிக்கை என்றாலும், சமூக இடைவெளி இல்லாமல் இவர்கள் கூடி போராட்டம் நடத்துவது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய் முடியும் என தெரிகிறது.


வடமாநிலங்களில் மட்டுமே வெடித்து வந்த வேதனை தமிழகத்திலும் ஆரம்பமாகி உள்ளது.. "சொந்த ஊருக்கு எங்களை அனுப்புங்கள்" என்று இங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.. ஆர்ப்பாட்டத்தில் இறங்குகிறார்கள்.. நடுரோட்டில் டயர்களை வைத்து எரித்து மறியல் செய்கிறார்கள்.


வடமாநிலங்களில் வேலை இல்லாததால், தமிழகத்துக்கு இவர்கள் புலம்பெயர்ந்து வந்து கிடைக்கின்ற வேலையை செய்ய ஆரம்பித்தனர்.. நாளடைவில் இவர்களது குடும்பங்களும் இங்கே ஐக்கியமாக தொடங்கிவிட்டன..


திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்தும் வருகின்றனர்.. அப்படியானால் தமிழகம் முழுவதும் இவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக உள்ளது.


இன்று கூடங்குளத்திலும் போராட்டம் வெடிக்க ஆரம்பித்துள்ளது.
முதல்தடவை அறிவிக்கப்பட்ட லாக்டவுனிலேயே இவர்களுக்கு வேலை இல்லை.. அதனால் எப்படியும் ஊரடங்கு முடிந்ததும் கம்பெனிகள் திறந்துவிடுவார்கள், வேலை திரும்ப கிடைத்துவிடும் என்று நம்பிக் கொண்டிருந்தனர்..


ஆனால் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டதும் கடுமையான அதிருப்திக்கு உள்ளாகினர்.. சம்பளம், வருமானம் இல்லாமல் இவர்களுக்கு அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் சிரமப்பட்டனர்.


தமிழக முதல்வர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக உணவு, சிகிச்சை என்று பல விஷயங்களை முன்னின்று கவனித்தாலும், இவர்களின் நோக்கம் எல்லாம் சொந்த ஊர் போக வேண்டும் என்பதிலேயே உள்ளது..


இதற்கு காரணம், ஊரடங்கு இந்த முறை முடிவுடையுமா, அல்லது நீட்டிக்கப்படுமா என்ற முடிவு இல்லாமல் திணறுவதுதான்.. இதைதவிர தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பும் பெருகி கொண்டே வருவதும் இவர்களின் கலக்கத்துக்கு காரணமாக இருக்கிறது.


ஆனால் போராட்டம் செய்வதாக இவர்கள் எல்லாரும் ஒன்றுகூடுவதுதான் முதல் அச்சமாக உள்ளது.. கிருமியை பற்றி கவலையில்லாமல், உயிரை பற்றியும் கவலை இல்லாமல் மொத்தமாக ஒன்றுகூடி எதிர்ப்பு பதிவு செய்து வருகிறாரகள்..


இதனால் ஏற்கனவே அதிகமாக உள்ள தொற்று எண்ணிக்கை மேலும் கூடும் அபாயம் உள்ளது.. இது போராட்டம் செய்பவர்களை தவிர மற்றவர்களையும் பீடிக்கும் அபாயம் உள்ளது.. இதனால் அரசுக்குதான் மேலும் மேலும் சிக்கல் எழும்.


புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லலாம் என்று மத்திய அரசு சொல்லிவிட்டாலும், இவர்கள் முறையாகவும், பாதுகாப்பாகவும் சொந்த ஊர்களுக்கு செல்ல மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்..


இந்த சமயத்தில் ஆர்ப்பாட்டம் என்றாலே சமூக இடைவெளி என்பது கேள்விக்குறிதான்.. நோயை திரண்டு வரவழைத்து கொள்வதுதான்.. இந்த தொழிலாளர்கள் ஆத்திரத்தினால் போலீஸாரையும் தாக்க ஆரம்பித்துள்ளனர்.. இது சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு நிச்சயம் வித்திடும். கோபாவசத்தில் சமூக இடைவெளியோ, கடுமையான தொற்றோ, கொடூர வைரஸோ... இப்படி எதுவுமே இவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை.


தமிழக அரசு சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கும் இது அச்சத்தை கொடுப்பதாக உள்ளது... கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் தாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சி தருகிறது..


ஏற்கனவே தமிழகம் பல சிக்கல்களில் உள்ள நிலையில், வன்முறைகளை இனியும் ஏற்க சக்தி இல்லை.. இந்த வட மாநிலத் தொழிலாளர்களை அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்க விரைந்து ஏற்பாடுகள் செய்வதே தமிழக மக்களுக்கும், அரசுக்கும் நல்லது. இல்லாவிட்டால் பேராபத்தில் நாம்தான் சிக்கிக் கொள்ள நேரிடும்!!


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image