மீண்டும் முஸ்லிம்கள் குறித்து அவதூறு: ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியரின் வேலையைபறித்த நிறுவனம்

இந்தியத் தூதரகத்தின் அறிவுரைகளையும் மீறி ஐக்கிய அரபு அமீரகத்தில் முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வலைதலங்களில் கருத்துக்களை பதிவிட்ட இந்தியரை வேலையிலிருந்து அதிரடியாக நிறுவனம் நீக்கியுள்ளது.


கடந்த இரு மாதங்களில் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முகநூல்களில் எழுதிய 5 இந்தியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பிஹார் மாநிலம் சப்ரா நகரைச் சேர்ந்தவர் பிராஜ்கிஷோர் குப்தா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ல ஸ்டீவின் ராக் எனும் நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.


இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் குப்தா முஸ்லிம்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் எழுதியுள்ளார். மேலும், கரோனா வைரஸ் பரப்புவதற்கும் காரணமானவர்கள் என்று சர்்சைக்குரிய வகையில் குப்தா எழுதியுள்ளார்.


இ்ந்த விவகாரம் குப்தா பணியாற்றும் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, குப்தாவுக்கு எந்தவிதமான முன்அறிவிப்பும் அளிக்காமல் உடனடியாக நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியுள்ளதாக கல்ஃப் செய்திகள் தெரிவிக்கின்றன இதுகுறித்து ஸ்டீவின் ராக் நிறுவனத்தின் மேலாளர் ஜீன் பிரான்கோஸிஸ் மிலன் வெளியிட்டஅறிக்கையில் “ஸ்டீவின் ராக் நிறுவனத்தில் பணியாற்றிய இளநிலை ஊழியர் ஒருவர் குறி்ப்பிட்ட மதத்தினரை இழிவாக சித்தரித்து கருத்துக்களை வெளியிட்டதால் அவருக்கு எந்த விதமான நோட்டீஸும் வழங்காமல் உடனடியாக பணியிலிருந்து நீக்குகிறோம்.


ஐக்கிய அரபு அமீரக அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு விதிகளை பின்பற்றி வருகிறோம். அதன்படி இனவெறி, வேறுபாட்டை தூண்டும் வகையில் பேசுவோர் சகித்ததுக்கொள்ளப்படமாட்டார்கள் என்ற அரசின் விதிப்படி அந்த ஊழியர் நீக்கப்பட்டுள்ளர். இதை அனைத்து ஊழியர்களுக்கும் எச்சரிக்கையாக விடுக்கிறோம் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஏப்ரல் 20ம்தேதி ஐக்கிய ஐக்கியஅரபு அமீரகத்துக்கான இந்தியத்தூதர் பவன் கபூர் ,இந்தியர்களுக்கு வெளியிட்ட எச்சரிக்கையில் “ இந்தியாவும், ஐக்கியஅரசு அமீரக அரசும் எந்த விதமான வேறுபாட்டையும் மக்களிைடயே காட்டுவதில்லை. பாகுபாடுகாட்டுதல் என்பது இரு நாடுகளின் சட்டத்துக்கும், ஒழுங்கிறும் மாறானது.


ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளஇந்தியர்கள் புரிந்து நடக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்திய அரசின் எச்சரி்கையையும் இதுபோல் தொடர்ந்து சம்பவங்கள் நடந்து வருகின்றன