சென்னையில் எதற்கெல்லாம் அனுமதி....

 பெருநகர சென்னை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் பலவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. முழு விவரம். * தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிறுவனங்களே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதி.


* அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும் இயன்றவரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.


* வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 % பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குளிர்சாதன வசதி இருந்தாலும் இயக்கப்படக்கூடாது.


*மத்திய அரசு உத்தவுப்படி ஜூன் 8 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. மொத்த இருக்கைகளில் 50% இருக்கையில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண வேண்டும்.


குளிர்சாதன வசதிக்கு அனுமதி இல்லை * டீக்கடைகள், உணவு விடுதிகள் (ஜூன் 7 வரை பார்சல் மட்டும்) மற்றும் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.


* ஜூன் 8 ஆம் தேதி முதல் டீக்கடைகளில் 50% இருக்கையில் அமர்ந்து டீக்குடிக்க வாடிக்கையாளர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.


*வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு மண்டலத்திற்குள் இபாஸ் இன்றி பயன்படுத்தலாம்.


*ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்‌ஷா அனுமதிக்கப்படுகிறது


முடிதிருத்தும் மற்றும் அழகுநிலையங்கள் குளிர் சாதன வசதியை பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.