அமெரிக்காவில் கட்டுப்பாடு தளர்வால் பாதிப்பு எகிறல்: நிபுணர்கள் எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், பல மாகாணங்களில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


உலகெங்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை, 37.40 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில், 2.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். அமெரிக்காவில் மட்டும், 12.37 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


அதாவது உலக பாதிப்பு மற்றும் பலியில், மூன்றில் ஒரு பங்கு, அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.கடந்த சில மாதங்களாக இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். இதனால், பல மாகாணங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.


அதே நேரத்தில், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் மாகாணம் உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.இந்நிலையில், புள்ளி விபரங்களின் அடிப்படையில், மருத்துவ நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது:அமெரிக்காவில் தற்போது, நாளொன்றுக்கு, 20 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. அதேபோல், தினசரி, குறைந்த பட்சம், 1,000 பலி பதிவாகிறது. அதிக அளவில் சோதனை செய்யப்படுவதால், அதிக பாதிப்பு இருப்பதாக கூறுவது முற்றிலும் தவறு.


உண்மையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது. அது தற்போது தான் தெரிய வருகிறது.தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு மற்றும் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயம் நிச்சயம் உள்ளது. இதற்கு மேலும் தவறு செய்ய வேண்டாம். கட்டுப்பாடுகள் இருந்த காலத்தைவிட, தற்போது மிக மோசமான நிலை உள்ளது.


மொத்தம், இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட, நியூயார்க் பகுதியில் மட்டும், நாட்டில் மொத்த பலியில், மூன்றில் ஒரு பங்கு பதிவாகியுள்ளது. அங்கு கட்டுப்பாடுகள் தொடர்வதால், பாதிப்பு மற்றும் பலி குறைவதாக தெரிகிறது. அதே நேரத்தில், ஒட்டுமொத்த புள்ளி விபரங்களைப் பார்க்கையில், நாட்டின் மற்ற பகுதிகளில், இவை அதிகரித்து வருகின்றன.நியூயார்க்கில், ஏப்., 13ம் தேதி நிலவரப்படி, புதிய பாதிப்பு, ஒரு லட்சம் பேரில், 9.3 பேருக்கு இருந்தது. அது, தற்போது, 8.6 ஆக குறைந்துள்ளது.


நியூயார்க்கை தவிர்த்து, நாட்டின் மற்ற பகுதிகளை பார்க்கையில், புதிய பாதிப்பு, 6.2ல் இருந்து, 7.5 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் தினசரி பலியிலும், நியூயார்க்கில் குறைந்து வருகிறது; நாட்டின் மற்ற பகுதிகளில் அதிகரித்து வருகிறது.இவ்வாறு, ஆய்வில் தெரியவந்துள்ளது.நியூயார்க்கில் புகழ்பெற்ற, சுரங்கப்பாதை ரயில் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளிப்பதற்கும், தூய்மைப்படுத்தவும், நேரம் குறைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.


குழுகலைப்புகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க, வெள்ளை மாளிகையில், துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில், சிறப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. 'இப்போது, வைரஸ் பரவலைத் தடுக்க, அந்தந்த மாகாண அரசுகளே நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால், இந்தக் குழுவை கலைக்க முடிவு செய்துள்ளோம்' என, மைக் பென்ஸ் கூறியுள்ளார்.


டாக்டர்கள்காட்டம்'கொரோனா பாதிப்பு தீவிரத்தை தடுக்க, மலேரியாவுக்கு வழங்கப்படும், 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மருந்தை அளிக்கலாம்' என, அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.


இதற்காக, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து, அவர் இந்த மருந்துகளை வாங்கினார். இதற்கு, அமெரிக்க டாக்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 'இந்த மருந்து தயாரிக்கப்படும் ஆலைகளில் ஆய்வு ஏதும் செய்யாமல் மருந்தை வாங்கியிருக்கக் கூடாது' என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.'பலி உயரத்தான் செய்யும்'


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image