வட மாநிலத்தவர்கள் ஊரடங்கும் உத்தரவை மீறி போராட்டம் நடத்துவதா : காயல் அப்பாஸ் கண்டனம் !

 


ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  .


கொரோனா வைரஸ் பரவலை தடுத்து மக்களின்  நலன் காக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கும் உத்தரவை மத்திய , மாநில அரசுகள் அமல் படுத்தியது இதனை வரவேற்று தமிழக மக்கள் அரசுக்கு முழு ஓத்துழைப்பு வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது  .


வட மாநிலங்கலிருந்து  தமிழகத்திற்கு கூலி வேலைகளுக்கு வந்துள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் ஊரடங்கும் உத்தரவுனால்  சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இது அவர்களின் நியாயமான கோரிக்கை என்றாலும், சமூக இடைவெளி இல்லாமல் இவர்கள் கூடி போராட்டம் நடத்துவது கொரோனா தொற்று அதிகமாக பரவ வாய்ப்புள்ளது என்பதை  உணர வில்லை .


ஊரடங்கு உத்தரவு  நீட்டிக்கப்பட்டதுனால் கம்பெனிகளில் வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல் அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் பெரும் அளவில்  வாழ்வாதாரம் பாதிக்க பட்டு வருவதுனால் சொந்த ஊருகளுக்கு  அனுப்பி வைக்கு மாறு வட மாநிலத்தை சேர்ந்தவர்கள்  கூடங்குளத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர் .


மேலும் அரசு இடம் நியாமான கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை ஆனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் அமல் படுத்த பட்ட  ஊடரங்கு உத்தரவை மதிக்காமல் மீறி போராட்டம் நடத்துவது சட்டத்தை மீறும் செயலாகும் . 


கொரோனா வைரஸை  முற்றிலும் ஒழிக்க மத்திய , மாநில அரசுகள் அமல் படுத்திய ஊரடங்கும் உத்தரவுக்கு தமிழக மக்கள் மதிப்பளித்து எவ்வளவு கஷ்டத்தையும் சமாளித்து வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்து வரும் இந்த நிலையில் வடமாநிலத்தவர்கள் சமூக இடை வெளியில்லாமல்  போராட்டம் நடத்துவதுனால்  கொரோனா வைரஸ்ஸை அதிகமாக பரப்பி விடுவார்களோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளார்கள்  . 


வட மாநிலத்தவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறியும் சமூக இடை வெளியில்லாமலும் போராட்டம் நடத்துவது தவறான செயலாகும் மேலும் கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு பணியில் ஈடு பட்டுள்ள காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தி நடு ரோட்டில் டயர்களை வைத்து எரித்து மறியல் செய்து வன் முறை முயற்சியில் ஈடுபடும் வகையில் உள்ள வட மாநிலத்தவர்களின் அராஜக போக்கை  ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது  .


வட மாநிலத்தவர்கள் அங்கு வேலை இல்லாமலும் குறைவான சம்பளம் என்பதாலும் இவர்கள் தமிழத்திற்கு ஏதேனும் கூலி வேலைக்கு வருகிறார்கள் நாளடைவில் இவர்களது குடும்பங்களும் இங்கே ஐக்கியமாக தொடங்கி விட்டன.


மேலும் வடமாநிலத்தவர்களினால் தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன குறிப்பாக சுங்கசாவடியில் தமிழக வாகன ஒட்டிகளை  தரகுறைவாக பேசுவது அடிப்பதும் , மற்றும் குற்ற செயலில் ஈடுபடுவது இது போன்று பல்வேறு குற்றசாட்டுகள் உள்ளன ஆகவே தமிழக அரசு இந்த விசயத்தில் மேத்தனம் காட்டாமல் இவர்களை அவர்வர்கள்  சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பது தமிழகத்திற்கு நல்லது என்று சுட்டிகாட்ட விரும்புகின்றோம் . 


எனவே  : காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களையும் போராட்டத்தை தூண்டி விட்ட அணைவரையும்  உடனடியாக காவல் துறை கைது செய்ய வேண்டும் 


வட மாநிலத்தை  சேர்ந்தவர்களை  அவர்வர்கள் சொந்த ஊருகளுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி கூடுதல்  நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.