கொரோனாவுக்கு சித்த மருத்துவச் சிகிச்சை - சென்னையில் 73 பேருக்கு சித்த வைத்திய உணவு

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் சித்த மருத்துவத்தின் துணையுடன் அதனைக் குணப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கி உள்ளன.


சென்னை கொரோனோ பாதிப்பு அனுதினமும் அதிகரித்து வரும் நிலையில் ஆங்கில மருத்துவம் மூலம் மட்டுமே அதற்கான சிகிச்சைகள் தற்போது அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அலோபதி மருத்துவத்துடன் சித்த மருத்துவமும் இணைந்து கொரோனோ தொற்றை 5 நாட்களுக்குள் குணப்படுத்துவதற்கான பணிகள் தற்போது சென்னையில் தொடங்கி உள்ளன. 
 
சென்னை அரும்பாக்கம் டி.ஜி வைஷ்ணவா கல்லூரியில் 73 கொரோனோ நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உணவே மருந்து என்ற அடிப்படையில் சித்த மருந்துகள் அடங்கிய உணவுகள் 3 வேளையும் கபசுர குடிநீர், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 15 வகையான மூலிகைப் பொருட்கள் அடங்கிய கசாயம் மற்றும் தேநீர் ஆகியவை அளிக்கப்படுகின்றன.  


சித்த மருத்துவர் கொரோனா பாதித்த நோயாளிக்கு மேற்கண்ட சிகிச்சைகள் 4 நாட்கள் அளிக்கப்பட்டு 5 ஆம் நாள் மீண்டும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 


சித்த மருத்துவர் அலோபதி மற்றும் சித்த மருத்துவத்தின் துணையுடன் நடக்கும் இந்த சிகிச்சை முறை பலனளிக்கும் பட்சத்தில் இது உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


Popular posts
கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை!
Image
அரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்
Image
பாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..!!
Image
முகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்!!!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image