உன் மனைவியோடு சேர்த்து வைக்கிறேன்!' -பணத்தோடு 7 கோழிகள், 2 ஆடுகளை அபகரித்த கரூர் மந்திரவாதி..

மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த கணவர் ஒருவரிடம், அவரது மனைவியைச் சேர்த்து வைப்பதாகக் கூறி, ரூ.30,000 ரொக்கம், 7 கோழிகள் மற்றும் இரண்டு ஆடுகளைப் பறித்த மந்திரவாதியால், கரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கரூர் மாவட்டம், தோகைமலை அருகில் உள்ள தொண்டமாங்கிணத்தைச் சேர்ந்தவர், கருப்பையா. இவரது சகோதரர் முருகன். முருகனுக்கும் அவரது மனைவி இளஞ்சியத்துக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம். இதன் காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.


இருந்தாலும், முருகனுக்குத் தனது மனைவி இளஞ்சியத்தோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பது விருப்பம். இதனை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சிவலிங்கம் என்பவர், முருகனின் சகோதரர் கருப்பையாவிடம், 'எனக்குத் தெரிந்த மந்திரவாதி மூலம் மாந்திரீகம் செய்தால், முருகனோடு இளஞ்சியத்தைச் சேர்ந்து வாழ வைக்க முடியும்' என்று யோசனை அளித்துள்ளார்


சிவலிங்கம் சொன்ன அறிவுரைக்குக் கருப்பையா உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, தோகைமலை ஊராட்சி, வருந்திபட்டியைச் சேர்ந்த மந்திரவாதி முருகன் என்பவரை அணுகி அவரிடம், 'எனது தம்பி முருகன் குடும்பத்தைச் சேர்த்து வையுங்கள்' என்று கூறியுள்ளார்.


அதற்கு சம்மதித்த மந்திரவாதி முருகன், "உன் தம்பியோடு, பிரிந்துபோன அவரது மனைவியை சளுதியில் சேர்த்து வைக்கிறேன். அதற்குக் காணிக்கையாக, 7 கோழிகள், ஒரு ஆடு, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வேண்டும்' என்று கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட முருகன், மந்திரவாதி கேட்ட அனைத்தையும் கொடுத்திருக்கிறார். ஆனால், இளஞ்சியத்தை முருகனோடு சேர்த்து வைக்கவில்லை.


இந்தநிலையில் கருப்பையா, 'கோழிகள், ஆடு மற்றும் ரொக்கப் பணம் வாங்கிவிட்டீர்கள். எப்போது மாந்திரீகம் செய்து, தம்பி குடும்பத்தைச் சேர்த்து வைப்பீர்கள்?' என மந்திரவாதியிடம் கேட்டுள்ளார்.


அதற்கு மந்திரவாதி முருகன் மற்றும் அவரது உதவியாளர் சிவலிங்கமும் தகாத வார்த்தைகளால் பேசி, கருப்பையாவை மிரட்டியதாகக் சொல்லப்படுகிறது. இதுகுறித்து, கருப்பையா தோகைமலை போலீஸாரிடம் புகார் அளித்தார்.


இந்த நிலையில், இதேபோன்று தொண்டமாங்கிணம் பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவரது மகள் லலிதா காணாமல் போயுள்ளார். ராஜலட்சுமியும் தனது மகளைக் கண்டுபிடித்து தரும்படி, மந்திரவாதி முருகனிடம் சொல்லியிருக்கிறார்.


அதற்காக, ராஜலட்சுமியிடம் 7 கோழிகள், 2 ஆடுகள், 30 ஆயிரம் ரொக்கப் பணத்தை மந்திரவாதி முருகன் பெற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சொன்னபடி ராஜலட்சுமியின் மகளைக் கண்டுபிடித்து தரவில்லை.


இதனால், தன்னை ஏமாற்றிவிட்டதாக ராஜலட்சுமியும் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால், தோகைமலை காவல் நிலைய போலீஸார் மந்திரவாதி முருகனின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து, காவல் துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்து வந்தனர்.


இந்தநிலையில், கரூர் மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் உத்திரவின் பேரில், தோகைமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ், வழக்குப் பதிவு செய்தார்.


போலி மந்திரவாதி மற்றும் அவரது உதவி மந்திரவாதியை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். இரண்டு குடும்பங்களை போலி மந்திரவாதி ஏமாற்றிருப்பது, தோகைமலைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது._


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image