தமிழக முதல்வரின் வீட்டில் கடமையிலிருந்த பெண் பொலிஸ் ஒருவருக்கு கொரோனா.....

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் ஒருவருக்கு வைரஸ் நோய் தொற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லம் அமைந்துள்ளது. முதல்வர் வீட்டு பாதுகாப்பு பிரிவில் சுழற்சி முறையில் ஆண் மற்றும் பெண் பொலிசார் பணியில் ஈடுபடுவது வழக்கம்.


இவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாப்பு பிரிவு பெண் பொலிஸ்காரர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்றுள்ளமை உறுதியாகி உள்ளது.


இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில் சென்றுள்ளார். தற்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் போது இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பாதுகாப்பு பணியில் உள்ள பிற பொலிஸ்காரர்களுடன் சேர்ந்து பணியாற்றியவர் இவர்.


எனவே இந்த பொலிஸ் பெண்மணி அல்லது இவருடன் பணியாற்றிய பொலிசார் முதல்வருடன் அருகாமையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சென்றிருந்தால் அது விபரீதங்களை ஏற்படுத்தும் என்ற அச்சத்தின் காரணமாக, அதிகாரிகள் மேலதிக விபரங்களை சேகரித்து வருகின்றனர்