சென்னை காவல்துறையில் இதுவரை கொரோனா தொற்றால் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரொனா அதிகரித்துவரும் நிலையில் காவலர்களும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சென்னை காவல்துறையில் கொரோனா தொற்றால் இதுவரை 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னை காவல் துறையில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


டிபி சத்திரம் காவலர் குடியிருப்பில் ஒருவருக்கும், கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் ஒருவருக்கும், புதுப்பேட்டை ஆயுதப்படை காவலருக்கும், மாம்பலம் காவலர் குடியிருப்பில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


சென்னை பெருநகர வளர்ச்சி குழும கண்காணிப்பாளர் ஒருவருக்கு கொரானா உறுதியாகியுள்ளது.அவர் தற்போது ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அதேபோல் ஸ்டான்லி மருத்துவமனை ரேடியாலஜி பிரிவில் பணியாற்றும் ஊழியர், அவரது மனைவி, 5வயது மகள் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


வேப்பேரி தீயணைப்பு வீரர் உள்பட 6 பேருக்கு கொரானா தொற்று உறுதியாகி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை நகரில் கொரானாவால் பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீர்ர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது .


சென்னை காவல் துறையில் இதுவரை பாதிப்பு உதவி ஆணையர் உள்பட சுமார் 60 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனர். இதற்கிடையே ஐஎஎஸ் அதிகாரியின் கார் ஓட்டுநர் ஒருவர் மூச்சுத்திணறல், கடும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை முடிவுகள் வெளியாகவில்லை.