முடிவிற்கு வந்த 510 நாள் அரசியல் குழப்பம்.. இஸ்ரேலில் பொறுப்பேற்ற நெதன்யாகு அரசு.. புதிய திருப்பம்!

டெல் அவிவ்: இஸ்ரேலில் திடீர் திருப்பமாக பெரிய அரசியல் குழப்பத்திற்கு இடையே அந்நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவி ஏற்க எதிர்க்கட்சியான இஸ்ரேல் ரேசிலியன்ஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.


கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இருந்து இஸ்ரேல் அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வந்தது. அங்கு எப்போது வேண்டுமானாலும் அரசியல் புரட்சி வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிறைய ஊழல்களை செய்துவிட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு.


பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது 6 க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் இருக்கிறது. அங்கு இருக்கும் மீடியாக்களுக்கு லஞ்சம் கொடுத்தது, வெளிநாட்டு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தது, நிறைய பரிசு பொருட்களை கோடிக்கணக்கில் வாங்கியது என்று நிறைய புகார்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு எதிரான இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரிக்கப்பட உள்ளது.


இந்த நிலையில் அங்கு கடைசியாக நடந்த மூன்று தேர்தலிலும் யாரும் பெரும்பான்மை பெறவில்லை. பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. முன்னாள் ராணுவ தலைவர் பென்னி கண்ட்சின் இஸ்ரேல் ரேசிலியன்ஸ் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இதனால் மூன்று முறை அங்கு தேர்தல் நடந்தும் ஆட்சி அமையவில்லை.


ஆனாலும் பிரதமர் பொறுப்பில் நெதன்யாகு நீடித்து வந்தார். இந்த நிலையில் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அவருக்கு எதிராக போராட்டங்களும் நடந்து வந்தது.


ஆனால் இஸ்ரேலில் திடீர் திருப்பமாக பெரிய அரசியல் குழப்பத்திற்கு இடையே அந்நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவி ஏற்க எதிர்க்கட்சியான இஸ்ரேல் ரேசிலியன்ஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.


நெதன்யாகுவிற்கு ஆதரவாக இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்கு அளித்தனர். 120 பேர் உள்ள நாடாளுமன்ற அவையில் 73 பேர் ஆதரவாகவும் 49 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.


இதனால் நெதன்யாகு தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருப்பார். எதிர்கட்சித் தலைவர் பென்னி அவருக்கு ஆதரவு அளித்துள்ளார்.
முதல் 18 மாதம் மட்டும் நெதன்யாகு ஆட்சியில் இருப்பார்.


மீதமுள்ள நாட்கள் எதிர்க்கட்சி தலைவர் பென்னி ஆட்சியில் இருப்பார். இந்த ஷேரிங் ஒப்பந்தம் காரணமாக அங்கு அரசியல் பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது. 510 நாட்களாக நீடித்து வந்த அரசியல் பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது.


பிரதமராக பதவி ஏற்று இருக்கும் பெஞ்சமின் நெதன்யாகு பாலஸ்தீன பிரச்சனையிலும், கொரோனா பிரச்சனையிலும் கவனம் செலுத்த போவதாக கூறியுள்ளார்.