வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே வாரத்தில் 51 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை இருந்து வந்தாலும், நாட்டின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் 0.7% என்ற குறைவான இறப்பு விகிதத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் இருந்து வருவது ஆறுதல் அளிப்பதாக இருந்தது.


இருப்பினும், இதுவரை இல்லாத வகையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மார்ச் மாதத்தில் தொற்று எண்ணிக்கை 124 ஆகவும், ஒரு உயிரிழப்பு இருந்தது. ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 2,075 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு 26 ஆக இருந்தது. இந்நிலையில், மே மாதத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் வேகமாக அதிகரித்து வருகிறது.


கடந்த ஒரு வாரத்தில்(மே 22-மே 29) மட்டும் தமிழகத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழிந்துள்ளனர். தேதி உயிரிழப்பு மே 22 4 மே 23 5 மே 24 8மே 25 7 மே 26 9 மே 27 6 மே 28 12 தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் 98 பேர் ஆண்கள், 47 பேர் பெண்கள் ஆவர். இதில், 21-40 வயதுக்கு உட்பட்ட 10 பேரும், 41-60 வயதுக்கு உட்பட்ட 64 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டோர் 71 பேரும் உயிரிழந்துள்ளனர்.


வயது உயிரிழந்தவர்கள் 21-40 10 41-60 64 60 . 71 சென்னையில் சோதனையை உடனடியாக அதிகரிக்காவிட்டால், ஜூன் மாதத்திற்குள் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்படாமல் இருப்பார்கள் என்றும், 1,400 பேர் உயிரிழப்பார்கள் என்றும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


இந்நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னையில் 5,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 21ம் தேதி வரை சென்னையில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக இருந்தது. இந்நிலையில், கடந்த 7 நாட்களில் சென்னையில் மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை சென்னையில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.