சென்னையில் ஒரே நாளில் 5 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு...

சென்னையில் ஒரே நாளில் மருத்துவர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா வார்டில் உள்ள மருத்துவப் பணியாளர்கள், கொரோனா தடுப்புப் பணியில் உள்ள காவலர்கள், நலவாழ்வுத்துறை அலுவலர்கள் ஆகியோருக்கும் தொற்று பரவி வருகிறது.


ஏற்கெனவே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனா வார்டில் பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள் சிலருக்குத் தொற்று ஏற்பட்டது.


சென்னையில் இன்று மட்டும் 5 அயனம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், ராயப்பேட்டை ஆகிய இடங்களில் தனியார் மருத்துவர்கள் 4 பேருக்கும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகி இருக்கிறது.


இந்த 5 பேருடன் தொடர்புடையோரின் பட்டியல் எடுத்து அவர்களைத் தனிமைப்படுத்திப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.