புதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தகவல்

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ் ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது: புதுவை மாவட்டத்திற்குட் பட்ட புதுவை, மாகே பகுதியை சேர்ந்த 34 பேர் கொரோ னாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின் றனர்.


இந்தநிலையில் புதிதாக புதுவையை சேர்ந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முத்தியால்பேட்டை முத்தைய முதலியார் வீதியை சேர்ந்த 2 பேர், சோலைநகர், மூகாம் பிகை நகர், தருமாபுரி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இவர்கள் அனைவரும் கொரோ னாவால் பாதிக்கப்பட்ட வர்களுடன் தொடர்பில் இருந் தவர்கள். ஏற்கனவே தொற்று இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 116 பேருக்கு பரி சோதனை செய்ததில் இந்த 5 பருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுவையில் கொரோ னாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந் துள்ளது. இதில் மாகேயில் சிகிச்சை பெற்று வரும் 2 பேரும் அடங்குவர். இதுதவிர புதுவை ஜிப்மர் குடியிருப்பில் வசித்து வரும் கொரோனா நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வரும் டிரைவரின் வீட்டிற்கு சென்னை கொடுங்கையூரில் இருந்து வந்த குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இவர்கள் ஜிப்மரில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வருகின்றனர். தற்போது புதுவையில் 37, மாகேயில் 2 பேர் என 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே புதுவையில் சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்து வீடு திரும் பியுள்ளனர். புதுவையில் தேவையான படுக்கை வசதி, டாக்டர்கள் உள்ளனர்.


இருப் பினும் புதுவை மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவ சியம். கொரோனா தொற்று இருப்பவர்கள் முழு விபரங் களை உடனடியாக அளித் தால் தொற்று பரவாமல் தடுக்கலாம். ஜூன் மாதம் நோய் தொற்று 10 மடங்கு அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித் துள்ளது. புதுவையில் 500 பேருக்கு நோய் தொற்று என வந்தால் நோய் பரவுவதை தடுப்பதில் சிரமம் ஏற்படும்.


எனவே பொதுமக்கள் சமூக விழிப்பு ணர்வோடு இருக்க வேண்டும். தவறாக இ-பாஸ் பெற்று மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும். இ-பாஸ் பெறு பவர்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து நோய் தொற்று வரக்கூடாது. காய்கறிகளை ஏற்றிக்கொண்டு பலர் வரக்கூடாது.


கடலூர், விழுப்புரம், திண்டிவனம், சென்னை வழியாக ஒரு நாளைக்கு 9 ஆயிரம் வாகனங்கள் வந்து செல்கிறது. அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் புதுவை யிலிருந்து செல்கின்றனர்.


அவர்களை தடுத்தால் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அளிக்க மகல்வரிடம் தெரிவித்துள்ளேன். சுகாதாரத்துறை சார்பில் 7, மாதத்திற்கு நீண்ட கால திட்டங்கள் வகுக்கப் படுகிறது. ஆனால் நிதி உள்ளிட்ட பிற களை அத்துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டியுள்ளது.


ஆசிரியர்களை சுகாதாரத் துறையின் கீழ் கொண்டுவந்து அவர்களையும் சுகாதார பணியில் ஈடுபடுத்த முடி வெடுத்துள்ளோம். அவர்கள் மூலம் வெளியிலிருந்து புது வைக்கு வருபவர்கள் குறித்த கண்காணிப்பு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.