சென்னையைச் சேர்ந்தவர்கள் புறநகர் பகுதிக்கு மது வாங்க வந்தால் கைது!

மதுக்கடைகள் உள்ள பகுதியைச் சேராதவர்கள் கடைக்கு வந்து மது வாங்க முயன்றால் கைது செய்யப்படுவார்கள் என்று தமிழகக் காவல்துறை அறிவித்துள்ளது. 
 
நாளை  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட  பல்வேறு நிபந்தனைகளுடன் மதுபானக்கடைகள் திறக்கப்பட உள்ளன. குறிப்பாகச் சென்னையைச் சுற்றி உள்ள செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட உள்ளன.
 
இம்மூன்று மாவட்டங்களில் உள்ளோர் மட்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் படி மதுபானக்கடை அமைந்துள்ள பகுதியில் வசிப்போர்  "வசிப்பிட அடையாள அட்டை" யுடன் வந்து மதுபானங்களை வாங்கிச் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இந்நிலையில் மதுபானக்கடைக்கு சம்பந்தமில்லாத பகுதியைச் சேர்ந்த, குறிப்பாகச் சென்னை மாநகர் போன்ற  பகுதியிலிருந்து வந்து மதுபானம் வாங்க முயற்சித்தால் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்படுவார்கள் என்றும் தமிழகக் காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் தெரிவித்துள்ளார்.


Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி அதிரடி உத்தரவு
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image