வைரஸ் இல்லாத மாவட்டமாக இருந்த தூத்துக்குடியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது.


மேலும்,  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 516 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் 27 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. அதில் ஒருவர் உயிரிழந்திருந்தார். எஞ்சிய 26 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 


இதனால் கடந்த சில நாட்களாக கொரோனா இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி இருந்தது.


தூத்துக்குடி ரெயில் நிலையம் இந்நிலையில், தூத்துக்குடியில் இன்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வைரஸ் பாதிக்கப்பட்ட 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கடந்த சில நாட்களாக கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்த தூத்துக்குடியில் இன்று புதிதாக 2 பேருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.