போயஸ் இல்லத்தில் ஒரு பகுதியை மட்டுமே நினைவு இல்லமாக மாற்ற பரிந்துரை: ஐகோர்ட் அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பு

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்கும் வழக்கில் அவரது அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் 2-ம் நிலை வாரிசுகளாக நியமித்து தீர்ப்பு வெளிவந்துள்ளது.


தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயல லிதாவின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நிய மிக்க கோரி சென்னையை சேர்ந்த அ.தி.மு.க.வினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை ஐகோர்ட் டில் வழக்கு தொடர்ந்தி ருந்தனர். 


இந்த வழக்கில் நீதி மன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துக்க (ளுக்கு தங்களையே நிர்வாகி களாக நியமிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர்.


இதில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி நிறைவடைந்ததை அடுத்து வழக் கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்றைக்கு ஒத்தி வைத்தனர். - இதனடையே ஜெயல் இதனிடையே ஜெயல லிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல் லமாக மாற்றுவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதிகள் என்.கிருபாகரன், அபதுல குத்தூஸ் ஆகியோர் இன்று காணொலிக்காட்சி வாயிலாக வழங்கினர். அதில் ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியை அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்றும், தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தும் சென்னை : சென்னை ஐகோர்ட் உத்தர விட்டு உள்ளது.


இதுபற்றி 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும், உத்தரவு பிறப் பித்து உள்ளது. ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர் வகிக்க நிர்வாகியை நியமிக் கக்கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.


ஜெயலலிதாவின் சொத் துக்களுக்கு அவரது அண் ணனின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரை 2-ம் நிலைவாரிசுகளாக அறிவித்து உள் ளது. தொடர்ந்து போயஸ் தோட்டம் இல்லத்தை முழு மையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பாசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்ட நீதி மன்றம், வேதா இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றி கொள்ள பரிந்துரை வழங்கியுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை முதல் அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்ற கூடாது? என்று கேள்வியும் எழுப்பி யுள்ளது.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image