ஆபாசப் படங்களைப் பகிர்ந்ததாக தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஜெர்மனியில் குழந்தைகளின் ஆபாசப்படம் குறித்த சர்வதேச கும்பலுடன் தொடர்புடைய 7 இந்தியர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது ஜெர்மனியின் லுபெக் நகரில் சாச்சே ட்ரெப்கே என்பவன் குழந்தைகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதுடன், அதை வீடியோவாக எடுத்து விநியோகித்தது ஆகிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டான். அவன் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பகிரப்படும் 29 வாட்ஸ் ஆப் குழுக்கள் இருந்ததும், அதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 483 பேர் உறுப்பினராக இருந்ததும் கண்டறியப்பட்டது. அதில் 7 இந்தியர்களின் வாட்ஸ் ஆப் எண்களும் இருப்பதாகக் கூறி கடந்த ஜனவரியில் ஜெர்மனி தூதரகம் மூலம் இந்தியாவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. செப்டம்பர் மாத இறுதியில் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ. இந்தியாவின் 7 பேர் மீது குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பகிர்ந்ததாக தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்த இப்ராஹிம் சாஹிப் என்பவனும் ஒருவன் என்று கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்