தமிழக பா.ஜ.க தலைவரை இதுவரை அறிவிக்காமலேயே இருக்கிறது டெல்லி தலைமை. இதற்குத் தமிழக பா.ஜ.க-வுக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசலே காரமெனத் தெரியவந்துள்ளது

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை, கடந்த ஆகஸ்ட் மாதம், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தமிழிசைக்குப் பிறகு, தமிழக பா.ஜ.க-வின் தலைவரை இதுநாள்வரை பா.ஜ.க மேலிடத் தலைமை அறிவிக்காமல் இருக்கிறது. தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த, தமிழிசையின் பதவிக்காலம் வரும் டிசம்பருடன் முடிவடையவிருந்தது. தமிழிசை தமிழிசை அவருக்குப் பின் யார் தலைவராவார் என்று பேச்சு எழுந்த நிலையில், தெலங்கானா தலைவராகத் தமிழிசை நியமிக்கப்பட்டார். தமிழக பா.ஜ.க-வின் அடுத்த மாநிலத் தலைவர் யார் என்கிற விவாதம் கடந்த ஒரு மாதகாலமாகவே கமலாலயத்தில் தொடர்ந்து நடந்துவருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடுத்த தலைவருக்கான போட்டியில் உள்ளனர். அதேநேரம், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கரு நாகராஜன் ஆகியோரும் தலைவர் பதவிக்கான பட்டியலில் உள்ளனர். அதேநேரம் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால், கட்சியின் இமேஜை மாற்றலாம் என்று டெல்லி தலைமை கருதுவதால், கிருஷ்ணகிரி முன்னாள் எம்.பி நரசிம்மன், திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன'' என பா.ஜ.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர். வானதி சீனிவாசன், பாஜக வானதி சீனிவாசன், பாஜக கே.டி.ராகவனை தலைவர் பதவியில் அமர்த்த டெல்லி தலைமை ஆரம்பத்திலிருந்தே விரும்பிவருகிறது. கே.டி.ராகவன் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினர். கடந்தமாதம் சென்னையில் நடந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திலும் ராகவன் பெயர்தான் முன்மொழியப்பட்டது. அதேநேரம், நயினார் நாகேந்திரன் மாநிலத்தலைவராக அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அவர்மீது டெல்லி தலைமைக்கு நல்ல அபிப்ராயம் இருந்ததால், அவரை டிக் அடித்தது டெல்லி. ஆனால், நயினார் நாகேந்திரன் வருவது கட்சிக்குள்ளேயே பலருக்குப் பிடிக்கவில்லை. அ.தி.மு.க-விலிருந்து பி.ஜே.பி-க்கு வந்தவர் நயினார் நாகேந்திரன். பிஜேபி-யின் மாநிலத்தலைவராக வேண்டுமென்றால் குறைந்தது ஐந்து வருடங்களாவது கட்சியில் உறுப்பினராக இருக்கவேண்டும். நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன் ஆனால், நயினார் நாகேந்திரன் பா.ஜ.க-வுக்கு வந்து நான்கு வருடங்கள்தான் ஆகின்றன. ஆனாலும், நயினாருக்காக சட்டத்தை மாற்றவும் பா.ஜ.க தயாராக இருந்தது. இந்நிலையில்தான், நயினார் தலைவராக வருவதை விரும்பாத சிலர், டெல்லிக்குப் படையெடுத்தனர். இதனால், நயினார் தலைவராக அறிவிக்கப்பட இருந்தது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, சிலரை சமாளிக்கலாம் என்று நயினார் தரப்பு களத்தில் இறங்க, அதை டெல்லி தரப்பு விரும்பவில்லை. இந்நிலையில், தலைவர் பதவி காலியாகி ஒரு மாதம் ஆனநிலையிலும், யாரையும் அறிவிக்காமல் இருக்கிறது டெல்லி தலைமை. இதற்குக் காரணம் தமிழக பாஜக-வுக்குள் நிலவும் உட்கட்சிப்பூசல்தான் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். சி.பி.ராதாகிருஷ்ணன் தலைவராக வருவதற்கு வானதி தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது. சி.பி.ராதாகிருஷ்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் சி.பி.ஆர் தோற்க வானதிதான் காரணம் என அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து பேசிவரும் நிலையில், அவர்கள் நயினாருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால், நயினார் வருவதை முன்னாள் தலைவர்களும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் விரும்பவில்லை. அதோடு, குறிப்பிட்ட சாதியை அவர் முன்மொழிவார் என்றும் அவருக்கு எதிராகப் பேசப்பட்டுவருகிறது. தமிழிசை ஆதரவாளர்கள் தற்போது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். தமிழிசைக்கு முன், தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தவர் பொன்னார். பா.ஜ.க இதுபோன்ற உட்கட்சிப் பூசல்களால் சிதறுண்டு இருக்கும் நிலையில், மூத்த தலைவரான பொன்னார் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நிலைமை சரியாகும் என்கிறார்கள். பொன். ராதாகிருஷ்ணன் பொன். ராதாகிருஷ்ணன் அதோடு, இந்த உட்கட்சிப்பூசலைத்தவிர்க்க, தமிழ்நாட்டுக்கு நான்கு செயல் தலைவர்களை நியமிக்கவும் மத்திய தலைமை யோசித்து வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி என மண்டலங்களாகப் பிரித்து செயல் தலைவர்கள் நியமிக்கப்படலாம். அதேநேரம், பொன்னார் அல்லது சி.பி.ராதாகிருஷ்ணன் தலைவராக விரைவில் அறிவிக்கப்படலாம் என்கிறது கமலாலய வட்டாரம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்