அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொறுப்பற்ற பேச்சு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம்

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. களக்காடு அருகே உள்ள கேசவனேரி ஊரில் ரேசன் கடை கிடையாது கேசவனேரி மக்கள் ரேசன் கடைக்காக மூனு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கல்லடி சிதம்பரபுரத்திற்கே போக வேண்டியுள்ளது என்பதால் களக்காட்டில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள்சந்தித்து தங்களின் பகுதியில் உள்ள ரேசன்கடை தொடர்பான மனுவை கொடுத்துள்ளனர். அந்த மனுவை வாங்க மறுத்த ராஜேந்திரபாலாஜி, இஸ்லாமியர்கள் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே! பின் எதற்கு எங்களிடம் கொண்டு வந்து மனுவை தருகின்றீர்கள்? 6 சதவிகித வாக்குகளை வைத்து நாக்கு வழிக்கவா முடியும்? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொறுப்பற்ற முறையில் பேசியது கடும் கண்டனத்துக்குறியது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க கூடிய மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் இணைந்து சிறுபான்மை மக்கள் நலன் பெறும் வகையில் பல சலுகைகளை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. இதை சிறுபான்மை மக்கள் மறக்கமாட்டார்கள் . அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இத்தகை செயலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டிக்கிறது, எனவே : நான்குநேரி தொகுதியில் அ தி முக அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெரும் என அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்