முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:மதுரைக்கு புதிய கலெக்டர்

சென்னை: போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரைக்கு புதிய கலெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளராகவும், எரிசக்தி துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் போக்குவரத்துறை முதன்மை செயலாளராகவும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவன தலைவர் அசோக் ேடாங்ரே சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளராகவும், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் கூடுதல் தலைமை செயலாளர் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவன தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு, தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு நிறுவன தலைவர் பொறுப்பையும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்கள். திருவள்ளூர் மாவட்ட சப்கலெக்டர் ரத்னா, அரியலூர் மாவட்ட கலெக்டராகவும், அரியலூர் கலெக்டர் வினய், மதுரை மாவட்ட கலெக்டராகவும் (தற்போது மதுரை மாவட்ட கலெக்டர் ராஜசேகர் விடுப்பில் உள்ள நிலையில்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு பணியில் இருந்த சுப்ரியா சாகூ, தமிழ்நாடு சிறுதேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் கூட்டமைப்பு மேலாண்மை இயக்குனராகவும், தமிழ்நாடு சிறுதேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் கூட்டமைப்பு மேலாண்மை இயக்குனர் வினித், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மதுரை கலெக்டர் ராஜசேகர் பல்வேறு அரசியல் அழுத்தம் காரணமாக அரசிடம் முறைப்படி விடுப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கபடவில்லை. இதனால் அவர் விடுப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு நீண்ட விடுமுறையில் சென்றார். இந்நிலையில் அவருக்கு பதில் மதுரை கலெக்டராக வினய் நியமிக்கப்பட்டுள்ளார். இது ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்