பண மோசடியை தடுக்கவங்கி ஒழுங்குமுறை உயரதிகாரிகள் உள்ளிட்ட 19 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதுடில்லி: நாட்டில் பண மோசடியை தடுக்கும் வகையில் 19 உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், பண மோடியை தடுக்கும் வகையில், மத்திய அரசின் வருவாய் செயலாளர் தலைமையில், நிதி சேவை மற்றும் பொருளாதார விவகாரங்கள், கார்பரேட் விவகாரம்,வெளியுறவுத்துறை விவகாரம் ஆகியவற்றிற்கான அமைச்சகத்தின் செயலாளர்கள் ,உளவுத்துறை, உள்துறை இயக்குனர்கள், செபி தலைவர், வங்கி ஒழுங்குமுறை உயரதிகாரிகள் உள்ளிட்ட 19 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் பண மோசடி தடுப்பு சட்டம் 2002-ன் கீழ் விசாரணை நடத்தும் அதிகாரம் உடையவர். இவ்வாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை