சீன அதிபரின் வருகையையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு

பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையொட்டி சென்னை விமான நிலையம் மற்றும் அவர் தங்கவுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா- சீனா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை சென்னை வருகை தரவுள்ளார். இதையடுத்து, விமான நிலையத்தில், 3 துணை ஆணையர்கள் தலைமையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் சீன அதிபர் தங்கும் நட்சத்திர விடுதி மத்திய தொழில் பாதுகாப்பு படையில் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதியில் இருந்து முட்டுக்காடு வரை 4 டிஐஜிக்கள் தலைமையில் 16 துணை ஆணையர்கள் மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பல மையங்களாக பிரிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஜின்பிங்கின் பயணத்திற்காக, அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய, குண்டு துளைக்க முடியாத 4 சொகுசுக் கார்கள் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. பயணப்பாதையில் சிக்கல் ஏற்பட்டால் மாற்றுப்பாதையில் அழைத்து செல்வதற்கான திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்