சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்பு எவ்வாறு உற்றுநோக்கப்படுகிறது?
சீன அதிபரின் இந்திய வருகையால் இரு நாட்டு உறவில் ஏற்பட போகும் மாற்றம் என்ன என்ற கேள்வியும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு எவ்வாறு உற்று நோக்கப்படுகிறது என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பல்லவ பூமியில் இந்திய - சீன தலைவர்களின் சந்திப்பு இன்று நடைபெறுகிறது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெரும் இந்த சந்திப்பு மாமல்லபுரத்தில் நிகழ அடித்தளமிட்டது சீன அரசு. அதனை நிறைவேற்றி காட்டவுள்ளது இந்திய அரசு என்கிறார் தென்னிந்திய சுற்றுலாத் துறை கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பாலாஜி. இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பில் ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாக வாய்ப்பு இல்லை. ஆனால், காஷ்மீர் விவகாரம், திபெத் உட்பட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன். இந்திய - சீன தலைவர்களின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்க இருப்பது தமிழர்களுக்கு பெருமை தரக்கூடியது என்றும் அவர் தெரிவி இந்திய - சீன தலைவர்களின் சந்திப்பு அமெரிக்காவுக்கு போட்டியாகவும், வணிக ரீதியிலான நட்புக்கு அடித்தளமாக அமையுமென தெரிவிக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். இரு நாட்டு தலைவர்களின் இரண்டு நாட்கள் சந்திப்பில் தமிழகம் முக்கியத்துவம் பெறுவது பெருமைக்குரியது என்பது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் ஒருமித்த குரலாகவே உள்ளது.