நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை...!

மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி, அங்குள்ள வெண்ணை உருண்டை பாறை பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் அக்டோபர் 11ம் தேதி வருவதையொட்டி, பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் சந்திப்பிற்காக மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் முக்கிய பகுதியான வெண்ணை உருண்டை பாறை பகுதியில் புல்தரைகள் அமைத்தல், சாலை அமைத்தல், அலங்கார மின் விளக்குகள் பொருத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வெண்ணை உருண்டை பாறை பகுதிக்குள் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை