மெல்ல நடந்தால் சீக்கிரம் வயதாகும்!

ஒருவரது நடையை, அவரது பொது உடல் நலத்தின் அளவுகோலாக பார்ப்பது, மருத்துவ உலகில் ஏற்கப்பட்ட முறை தான். ஆனால், நடையின் வேகத்திற்கும், வயது ஆகி மூப்படைவதற்கும் உள்ள தொடர்பை அமெரிக்கா, டென்மார்க், நியூசிலாந்து, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு உறுதி செய்துள்ளது. கடந்த, 1970களில் பிறந்து தற்போது, 45 வயதை தாண்டிய, 904 பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகளை எடுத்து, விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அவர்களில் மெதுவாக நடப்பவர்களுக்கும், வேகமாக நடப்பவர்களுக்கும் உள்ள உடல் நல குறியீடுகளையும், மன நல குறியீடுகளையும் ஆராய்ந்தபோது, மெதுவாக நடப்பவர்களின் மூளை எடை, அடர்த்தி ஆகியவை குறைவாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இவர்களின் பிற உடல் நல காரணிகளும் சற்று பிந்தியே இருந்தன. இவர்கள், 45 வயதிலேயே மூப்பிற்குரிய அறிகுறிகள் தட்டுப்பட ஆரம்பித்திருப்பதை விஞ்ஞானிகள் கவனித்தனர். எனவே, ஒருவர் மெதுவாக நடப்பவர் என்றால், அவருக்கு சீக்கிரமே வயதாக வாய்ப்புகள் அதிகம் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்