தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை பகுதியை சேர்ந்தவர் சித்ரா. பவானியிலுள்ள மின்சார வாரியத்தில் அலுவலராக பணியாற்றி வந்துள்ள இவர் இன்று காலை, தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் தனது மகள் இன்சிகாவை பள்ளியில் கொண்டு சென்றுவிட இரு சக்கரவாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அனைத்து நேரங்களிலும் சென்றுக் கொண்டே இருப்பதால், சாலையை கடக்கும் போது கவனம் என பதாகைகள் ஒட்டப்ப்பட்டுள்ளன. இந்நிலையில் அதனை சாலையை சரிவர கவனிக்காத சித்ரா தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சேலத்திலிருந்து கோவை நோக்கி வந்த சரக்குலாரி, எதிர்பாரவிதமாக மோதிய விபத்தில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்